அமெரிக்க பரிவாரங்களும் ஆன்லைன் கரசேவகர்களும்! Featured

Tuesday, 31 January 2017 17:10 Published in வாசகர்

அமெரிக்க #கரசேவகர்களால் தீக்கிரையாக்கப் பட்ட பள்ளிவாசலை மீள்கட்டமைக்க அமெரிக்கர்கள் பலரும் முன்வந்தது தெரிந்திருக்கும். இதற்காக தலா $10 முதல் $100 வீதம் சமூகதளம் வழியாக நிதி திரட்ட சிலர் முன்வந்தனர்.

24 மணி நேரத்திற்குள் 90% நிதியுதவி வந்து விட்டதாகச் சொல்லப்பட்டது. தற்போது எதிர் பார்க்கப்பட்ட இலக்கையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது.

புதிய அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதும் முதல் சட்ட திருத்தமாக, முஸ்லிம் நாடுகளிலிருந்து அகதிகளாகக் குடியேறுபவர்களைத் தடுக்கும் சட்ட திருத்தம் கொண்டு வந்தார். இதற்கு எதிராக அமெரிக்கர்கள் #waragainsttrump சமூக தளங்களிலும் உச்சநீதிமன்றம் மூலமும் போராடி வருகின்றனர். ட்ரம்பின் இந்த சட்டம் #Unamerican என்று பிரபலங்ககெல்லாம் கருத்து தெரிவித்துள்ளதோடு, தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளையும் சிலர் திரும்பக் கொடுக்கப்போவதாகச் சொல்லியுள்ளனர்.

ட்ரம்பின் மதவெறி போக்கு அமெரிக்காவின் 400 ஆண்டுகால பாரம்பரியத்திற்கு எதிரான ஒன்றும் என்றும் வீதிகளில் இறங்கி மக்கள் போராடி வருகின்றனர்.

அமெரிக்கர்கள் வேறு ஆட்சியாளர்கள் வேறு என்பதையே இந்நிகழ்வு காட்டுகிறது. நமது நாட்டிலும் 25 ஆண்டுகளுக்கு முன்பு பாபர் மஸ்ஜித் #கரசேவகர்களால் தகர்க்கப்பட்டது. நம்நாட்டிலும் ஆட்சியாளர்களும் மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர்! ஆளுக்கொரு செங்கல் கொடுத்திருந்தால் இன்னேரம் நமது நாடும் வரலாற்றில் இடம்பெற்றிருக்கும்!

-அதிரைவாலா

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.