சிறந்த பசு காப்பாளராக ஆவது எப்படி? Featured

Wednesday, 12 April 2017 16:56 Published in வாசகர்

பசு மாட்டிறைச்சி எங்கே எல்லாம் இருக்கிறது?

இந்திய தலித், இந்து, கிறித்துவ, முஸ்லிம் வீடுகளுக்குள் புகுந்து ஃபிரிட்ஜைத் திறந்து மாட்டிறைச்சியைத் தேடும் கொலைகார... மன்னிக்கவும், பசு காப்பாளர்களின் சிந்தனைக்கு ஆதாரப்பூர்வமான சில அறிவியல் உண்மைகள்:

பசு மாட்டிறைச்சி மற்றும் உடல் பாகங்கள், ஃபிரிட்ஜ் தவிர வேறு எங்கே எல்லாம் இருக்கின்றன?

- பல் விளக்குவீர்கள் எனில் உங்கள் டூத் பேஸ்ட்களில் உண்டு. சிரைப்பீர்கள் எனில் ஷேவிங் க்ரீமில் உண்டு.

- முகத்தைக் கழுவுவீர்கள், குளிப்பீர்கள் எனில் உங்கள் சோப்பில், ஷாம்ப்பூவில் கட்டாயம் உண்டு.

- காலை, மாலை காஃபி டீ குடிப்பவர் எனில், சர்க்கரை ஒவ்வொரு துளியிலும் உண்டு.

- நீங்கள் அணிந்திருக்கும் உடைகளில் உள்ளது.

- செண்ட் அடிப்பீர்கள் எனில் அனைத்து வாசனை திரவியங்களிலும் உண்டு.

- செருப்பு, ஷூ அணிபவர் எனில் அங்கே கண்டிப்பாக உள்ளது.

- சோறு சாப்பிடுபவர் எனில் அனைத்து நெல் வயல்களின் pestisides இல் உள்ளது.

- தீபாவளிக்கு வெடி வெடிப்பவர் எனில், ஒவ்வொரு வெடிமருந்திலும் உள்ளது.

- கிரிக்கெட், கால்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ளவர் எனில் ஒவ்வொரு பந்திலும் அது உண்டு.

- கார் டயர்களில், சீட்டுகளில் உள்ளது.

- மருந்துகள்: 100 க்கும் மேற்பட்ட பிரபல மருந்துகளில் மாட்டின் உடல்பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இன்சுலின், அனீமியா, ஜுரம், ஆஸ்த்மா ஆகிய மருந்துகளில் பசு மாட்டு பாகங்களே முதன்மை வகிக்கின்றன.

பால்: இது பசு தன் கன்றுக்காக உற்பத்தி செய்வது. கன்றை மாட்டின் கண்களில் காட்டி ஏமாற்றிவிட்டு மடியிலிருந்து பாலைக் கறந்து குடிக்கும் இழிசெயலை பசு காப்பாளர்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அதே போல் மோர், தயிர், வெண்ணெய், சீஸ், ஐஸ் கிரீம், இனிப்பு, சாக்லேட் மற்றும் இதர பால் பொருட்களை இன்றோடு அறவே ஒழித்து விட வேண்டும்.

ஆக, சிறந்த பசு காப்பாளராக (Best Gau Rakshak) ஆவது எப்படி என்றால், மேற்கூறிய பட்டியலில் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் பயன்படுத்துவதை விட்டொழித்து, பசுவைக் காப்பாற்ற வேண்டும்!

அடுத்து, மத்திய அரசால் வெளிநாட்டு ஏற்றுமதிக்காகக் கொல்லப்படும் பயன் தீர்ந்து போன பசு மாடுகளை Gau Rakshak எப்படி காப்பாற்றுவது?

- உழவுக்கு லாயக்கற்ற, பால் வற்றிப் போய்விட்ட கிழ மாடுகள் ஒவ்வொன்றையும் விவசாயிகளிமிருந்து நல்ல விலைக்கு வாங்க வேண்டும். (கோ)மாதாவுக்குப் பேரம் பேசி இழிவு படுத்தி விடக்கூடாது.

- இதனை பசு காப்பாளர்கள் ஒவ்வொருவரும் தம் சொந்தப் பணத்தில் மட்டுமே வாங்க வேண்டும். தன் சொந்த (கோ)மாதாவைக் காக்க, யாராவது அரசிடம் கடனுதவி கேட்பார்களா என்ன?

- விலைக்கு வாங்கிய கிழ பசு மாடுகளை வீட்டினுள் வைத்து முறையாகப் பராமரித்தல் அவசியம். தனியறை, ஏஸி போன்ற வசதிகள் செய்து கொடுத்து தேசப்பற்றின் அளவுகோளை பிறருக்குப் புரிய வைக்கலாம்.

- (கோ)மாதாவின் இறுதி மூச்சு வரை பராமரித்து, இயற்கையாக மரணித்தபின், தலித் மக்களை எதிர்பாராது, தாமே உரிய முறையில் ஈமச் சடங்குகளைச் செய்ய வேண்டும். இதற்குரிய செலவினை பிறரிடம் கையேந்தக் கூடாது.

பசு காப்பாளர்களே வாருங்கள், உண்மையான பசு காப்பாளாராக மாறுவோம்! தேசபக்தியை நிரூபிப்போம்!

(கோ)மாத்தாக்கீ ஜே!

- பசு நேசன்

Last modified on Wednesday, 12 April 2017 16:59
Comments   
+1 #4 Muslim 2017-04-14 17:23
செம்மையான பட்டியல்! அருமை!! விளக்கம் கேட்டு எந்தெத்த எருமைங்கள்லாம் வருதுன்னு பார்ப்போம்!!!
Quote
+1 #3 Karthik Narayan 2017-04-12 23:53
Haa... haa... கலக்கல்!

பசு காப்பாளர்களின் கதி? இதை பசு படித்தால், வாயால் சிரிக்காது;
Quote
+1 #2 அமுமீ 2017-04-12 23:05
அருமையான ஆலோசனைகள். பசு நேசர்கள் உடனடியாக இவற்றை செயல்படுத்தி தங்களது பசு நேசத்தை வெளிப்படுத்த வேண்டும். செய்வார்களா?
Quote
+1 #1 Geetha Natesan 2017-04-12 17:01
அடேங்கப்பா பட்டியல்! அருமை!

ஒவ்வொரு பசு காப்பாளரும் படித்து பின்பற்ற வேண்டியவை.
Quote
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.