வெள்ளித்திரையில் இஸ்லாமியர்கள்!! Featured

Tuesday, 13 June 2017 13:44 Published in வாசகர்

ன்றைய காலக்கட்டத்தில் அனைத்து மக்களையும் எளிதில் சென்றடையக் கூடிய பல தகவல் தொடர்பு சாதனங்களில் முக்கிய இடத்தில் இருப்பது "சினிமா"

பொதுவாகவே இஸ்லாமியர்கள் சினிமாவை புறக்கணிப்பது ஆபாசத்தின் விளைவாகவே என்று நான் கருதுகிறேன்.

இன்றைய சினிமாக்கள் அனைத்தும் பெண்களுக்கு என்று கொடுக்கபடக்கூடிய கதாபாத்திரம் அவர்கள் உடுத்தும் உடை , மது , போதை , மனிதனை மிருகமாக்கும் குரூர சிந்தனை கொண்ட வசனங்கள், இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச வசனங்கள், என்று பல அனாச்சாரங்கள் அடங்கிய ஒரு கருவியாக வருவதால் இஸ்லாமியர்கள் சினிமாக்களில் இருந்து தள்ளியே நிற்கவேண்டும் என்ற அறிவுரை மார்க்க அறிஞர்கள் மூலம் வழங்கபடுகிறது.

பலரும் ஆபாசத்தின் இருப்பிடம் சினிமா. சினிமா என்பது விபச்சாரம் என்றே கூறுகிறார்கள்.

எந்த ஒரு தகவல் தொடர்பு சாதனங்களாக இருந்தாலும் அதை எவ்வாறு நாம் பயன்படுத்துகிறோம் என்பதை வைத்து நன்மை தீமை கணக்கிடபடுகிறது.

சினிமாவை நாம் நன்மையான வழியில் பயன்படுத்தினால் எவ்விதப் பிரச்சினையுமில்லை. எல்லாமே நாம் பயன்படுத்தும் விதத்தினை பொருத்தே அமைகிறது.

இன்றைய காலங்களில் மக்களின் மனங்களை ஆட்கொள்கிறது ஊடகம்.

இன்றைய பலரின் கனவுத்தொழிற்சாலை சினிமாதான். பாகுபலி முதல் இன்று தங்கள் திரைப்படம் வரை 1000 கோடி வசூலை வசூல் செய்து உச்சத்தில் இருக்கிறது.

1000 கோடி என்று நாம் ஒரு திரைப்படத்தை மதிப்பிடும்போது அதை பார்த்தவர்கள் எத்தனை கோடி மக்கள் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

பிரம்மாண்டமாக காட்டக்கூடிய காட்சிகள் அனைத்தும் கேமராக்களால் மட்டுமே சாத்தியபடுகிறது.

நவீன காலங்களில் கனவுத்தொழிற்சாலை சினிமாவிற்கு நிச்சயமாக கேமரா அவசியம், அந்த கேமராவை இந்த உலகில் முதல் முதலில் கண்டுபிடித்தவர் இப்னு அல் ஹாத்தம் என்ற முஸ்லிம் அறிஞர்.

இன்றோ முஸ்லிம்கள் சினிமாவை விட்டு தள்ளி இருக்கிறார்கள்.

இன்றைய காலக்கட்டத்தில் சினிமாவின் தாக்கங்களை மக்கள் உணரவேண்டும்.

குறிப்பாக பா.ரஞ்சித் அவர்கள் படைத்த அட்டைக்கத்தி, மெட்ராஸ், கபாலி போன்ற திரைப்படம் சமூகத்தில் பலதாக்கத்தை ஏற்படுத்தியது.

பா. ரஞ்சித்தின் படங்கள் இன்றைய தமிழ் மக்களிடம் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் பா. ரஞ்சித் பயணிக்கிற கொள்கையில் அதன் இலக்கில் அவர் கருவியாக திரைப்படத்தை பயன்படுத்துகிறார்.

இதைபோல் நாம் ஏன் செய்யகூடாது??

இன்றைய சினிமாக்களில் இஸ்லாமியர்கள் எவ்வாறு சித்தரிக்கபடுகிரார்கள் என்று நான் விளக்கமாக சொல்லவேண்டிய அவசியமே இல்லை.

மிக மிக குறைந்த அளவு கொண்ட படங்கள் மட்டுமே இஸ்லாமியர்களை உண்மையான, நேர்மையான, நம்பிக்கையாக கதாபாத்திரங்களை கொண்ட படங்கள் வருகிறது.

நீர்ப்பறவை படத்தில் சமுத்திரக்கனி (வணிகத்தில் நேர்மையை காட்டியது போன்ற கதாபாத்திரம்),சலீம் படத்தில் விஜய் ஆண்டனி( நேர்மையான மருத்துவர் கதாபாத்திரம்) அஞ்சான் படத்தில் சூர்யாவிற்கு பாதுகாப்பு கொடுக்கிற முஸ்லிம்( நம்பிக்கையான கதாபாத்திரம்), கபாலியில் ரஜினிக்கு நெருங்கிய நண்பர் முஸ்லிம் (இவரும் நம்பிக்கை கதாபாத்திரம்தான்).

இதே போல் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களை மட்டுமே நாம் குறிப்பிட முடிகிறது.

முஸ்லிம்கள் ஆட்டுத்தாடி வைத்து சாம்பிராணி போடுவது, கடத்தல் பண்ணுவது, பயங்கரவாதத்தில் ஈடுபடுவது எனறுதான் பெரும்பாலான படங்கள் அமைந்து இருக்கிறது.

விஸ்பரூபம் பட எதிர்ப்பு யாரும் மறந்து இருக்கமாட்டோம். படம் தடை விவகாரம் இந்தியாவிலும் அதிர்ச்சி ஏற்படுத்தியது , உலகின் பல நாடுகளிலும் படம் வெளிவர தடை விதிக்கிபட்டது.

விஸ்பரூபத்தை விஸ்பரூபமாக எதிர்த்தோம் தவிர அதிலிருந்து (விஸ்பரூபம் படத்திலுருந்து) நாம் கற்கவேண்டிய பாடத்தை மறந்துவிட்டோம்.

இன்றைய சினிமா மிகபெரிய வலிமையான ஊடகம், ஒவ்வொரு நாட்டிலும் அதன் கலாச்சாரம் தன்மையோடு மட்டுமில்லாமல் அந்த நாட்டின் அரசியல், வெளியுறவுக்கொள்கை , சமூக காரணிகள் அனைத்தும் மையப்படுத்திதான் சினிமாக்கள் வெளிவருகிறது.

ஒவ்வொரு நாடுகளும் தனது தற்கால கொள்கையை மக்களிடம் திணிப்பதற்கும் எதிரிகளாக கருதும் நாடுகளின் அவர்கள் சார்ந்த சமூகத்தை கொச்சையாக, பயங்கரவாதிகளாக, அவர்கள் கலாச்சாரத்தை கேவலப்படுத்துவதாக காட்டுவார்கள்.

இதற்க்கு தமிழ்படத்தில் பல படங்கள் உண்டு,

உன்னைப்போல் ஒருவன், விஸ்பரூபம், பயணம் போன்ற பல படங்கள் அவ்வாறே அமைந்தது.

இந்தியாவில் பஜ்ரங்தள் பயங்கரவாதிகள் என்றுதான் பலருக்கு தெரியும் ஆனால் 'பஜ்ரங் பைஜான்',என்ற படத்தின் மூலம் அனைவருக்கும் பஜ்ரங்தல் பயங்கரவாதிகள் இல்லை பாசக்காரர்கள் என்று தவறான கொள்கையை திணித்தார்கள்.

பாகுபலி என்ற கற்பனை கதாபாத்திரம் ஜாதியை முன்னிறுத்தி நாளைய வரலாற்றில் உண்மையாக, பாகுபலியை கடவுளாக சித்தரிக்கும் அளவிற்கு காட்சிகள் பிரமாண்டமாக அமைத்து கொடுத்தார்கள்.

இதேபோன்று ஊடகம் வழியாகத்தான் பல தந்திரங்கள் நடந்தேறிகொண்டு இருக்கிறது.

உலக அளவில் இஸ்லாமியர்களை பயங்கரமாக திரைப்படம் வழியாக காட்டுவதற்கு பல உளவு அமைப்புகள் மறைமுகமாக நிதி உதவி செய்கிறார்கள். இதை நாம் உணர வேண்டும்.

உலகின் 90 சதவிகிதப் படங்கள் வெறும் பொழுதுபோக்கிற்கானவை என்றாலும் எல்லா வணிகப் படங்களும் ஒருவகையான மோசமான நச்சு வட்டத்தில்தான் இயங்குகிறது.

இதையும் நாம் உணரவேண்டும்,

முஸ்லிம் சமூகம் திரைப்படம் குறித்து அறிவுப்பூர்வமான ஒரு நிலையை எடுக்கவேண்டும்.

பல பல புதிய கருவிகளை கண்டுபிடிக்கிறோம் ,அதை நாம் பயன்படுத்த தவறுகிறோம், அது நமக்கே வினையாக வந்து முடிந்துவிடுகிறது.

எங்கே இந்த தவறு நடக்கிறது?

ஆப்கான், ஈராக், எகிப்து, சிரியா, ஜோர்டான், லிபியா ஆகிய நாடுகளின் மீது இஸ்ரேல் அமெரிக்கா தொடுத்த மோசமான ஆக்கிரமிப்புப் போரை அமெரிக்கா நியாபடுத்தி அதன் வெளியுறவு கொள்கையை உலகம் அறிய திரைப்படத்தை கருவியாக பயன்படுத்துகிறது.

அமெரிக்கா பெரிய அண்ணன் போல் அடாவடியாக பல நாடுகளை ஆக்கிரமிக்க போரை தொடங்குகிறார்கள், திரைப்படத்தை கருவியாக வைத்து அதை நியாபடுத்துகிரார்கள்.

குறிப்பாக ராக் நடித்த ஜியோ ஜோ, சில்வஸ்டர் ஸ்டோலன் நடித்த ரேம்போ போன்ற படங்கள் அமெரிக்க வெளியுறைவு கொள்கையை நியாபடுத்தி எடுக்கப்பட்ட படமாக இருக்கும்,

சிவில்வார், கேப்டன் அமெரிக்கா போன்ற படங்கள் மூலம் அமெரிக்கா நவீன ஆயுதங்களை பற்றியான உலக மக்களுக்கும், பல நாடுகளுக்கும் அச்சத்தை கொடுப்பதுபோன்று அமைந்து இருக்கும்.

ஆனால் இது அனைத்தும் பொய் என்று எவ்வாறு நாம் கொண்டு செல்வோம்?

மக்களை மூளைசலவை செய்ய சினிமா அவசியமாக தேவைப்படுகிறது.

முஸ்லிம்களுக்கான படமான தி மெசேஜ், உமர் முக்தார் படங்கள் போன்று வேறு படங்கள் இன்னும் திரையில் வரவில்லை.

ஜிஹாத்த்தின் உண்மையான வடிவத்தை காட்டிய உமர் முக்தார் படத்தின் தயாரிப்பாளர் முஸ்தபா அஹத் அவர்கள் மாவீரர் சுல்தான் சலாஹுதீன் அய்யூபி அவர்களின் வீர வரலாறை எடுக்க முயன்ற போது இஸ்ரேல் உளவு அமைப்பு மொசாத்தால் ஜோர்டானில் ஹோட்டலில் குண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

ஏன் இஸ்ரேல் செய்தது?

மாவீரர் சுல்தான் சலாஹுதீன் அய்யூபி வரலாறு படமாக வந்தால் ஜெருசலத்தை ( இஸ்ரேல்) எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்ற சிந்தனை உலக முஸ்லிம்கள் மத்தியில் வரும்.

இதை சரிக்கட்ட மொசாத் அமைப்பை வைத்து முஸ்தபா அஹதை படுகொலை செய்தார்கள்.

எகிப்தின் நாசர், ஈரானின் ஷா பகலவி போன்ற சிந்தனைகொண்ட முஸ்லிம் ஆட்சியாளர்கள் சினிமாவை சரியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தினார்கள்.

இன்றும் யூடூப்களில் ஈரானிய படங்கள் அதன் காட்சி அமைப்புகள் மிகவும் அருமையாக எக்காலத்திற்கும் உகந்த கருத்துக்களை கொண்டதாகவே இருக்கிறது.

2012 ஆஸ்கார் விருது "தி செப்பரேசன்" ஈரானிய படத்திற்கு கிடைத்தது.

இதேபோன்று எடுத்து சொல்வதற்கு பல படங்கள் இருக்கிறது. இதை நாம் உணரவேண்டும், குறிப்பாக இஸ்லாமிய இயக்கங்கள், அறிவுஜீவிகள், செல்வந்தர்கள் கூட்டு முயற்சியாக இதே போல் விடயங்களிலும் கவனம் செலுத்தவேண்டும்.

நம்முடைய தேவைக்குத்தான் திரைத்துறை, திரைத்துறையை முறையாக பயன்படுத்த நாம் களத்தில் இறங்கவேண்டும்.

இன்று திராவிட, இடதுசாரிகள் சிந்தனைகொண்டவர்கள் படங்களில் ஆங்காங்கே சில இஸ்லாமிய நல்ல கதாபாத்திரத்தை பாராட்டி புகழ்கிறோம், அதை நாம் கையிலெடுத்து உண்மையை உலகறிய செய்வோம்.

நடிகர்களுக்கு பணம்தான் குறிக்கோள், அவர்களுக்கு கதாபாத்திரம் பற்றியெல்லாம் கவலை கொள்ளமாட்டார்கள்.

திரைப்படம் என்பது பல்வேறு கலைஞர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் ஒரு கருவி.

இந்த கருவி மூலம் நல்ல கருத்துக்களையும், முற்போக்கு சிந்தனைகளையும் அதன் எண்ணங்களையும் எளிதாக இளைய சமூதாயத்தினரிடம் எடுத்து செல்லலாம்.

திரைப்படங்கள் மூலமும் நாம் சாதாரண மக்களுக்கு உதவ முடியும், உண்மையை உலகறிய செய்ய முடியும், மேலும் கலைகளால் மக்கள் பயனடைவதற்கு ஏராளம் இருக்கிறது.

நன்றி
யூசுப் ரியாஸ்.

(வரலாற்று தகவல் எடுக்க பயன்பட்ட நூல் - மாற்றிச் சிந்திப்போம்- CMN சலீம்)

Last modified on Wednesday, 14 June 2017 02:45
Comments   
-1 #1 Abusaad 2017-06-13 17:30
Pls correct as mossed killed mustafa akkat not the salahuddin ayyubi rah
Quote
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.