வீடியோ கேம் விட்டில் பூச்சிகள் Featured

இந்த பரபரப்பான வாழ்க்கையில் இயந்திரமாக ஓடிக்கொண்டிருக்கும் நம்மை தீடீர் என்று நிறுத்தி, நமது அன்பு குழந்தைகள் சிக்கித் தவிக்கும் ஆபத்தான உலகை நமது கவனத்தில் திடுக்கிடச் செய்தது. புழுவைல் என்ற உயிர் கொல்லி வீடியோ கேம். அதை பற்றித்தான் சில வாரங்கள் முன்பு பரபரப்பாக பேசி கொண்டு இருந்தோம்.

ரஷ்யாவில் ஆரம்பித்து, மதுரை வரை உலக முழுக்க நூற்றுகணக்காணவர் இந்த கேமை விளையாடி தற்கொலை செய்து கொண்டனர் பலர் இந்த கேமால் பாதிக்கப்பட்டு மனநிலை மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றுக்கொண்டிருகின்றன.

இந்த வீடியோ கேமை விளையாடுபவர்களும் 50 ஆபத்தான சவால்கள் கொடுக்கப்பட்டு முடிவில் தற்கொலை செய்ய தூண்டப்படுகின்றனர். முந்தை சவால்களில், விளையாடுபவர்களின் பெறப்பட்ட பல ரகசிய தகவல்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டப்பட்டு தற்கொலை செய்ய நிர்பந்திக்கின்றனர்.

இதை கேள்விப்பட்ட உடனே பதறி அடித்துக்கொண்டு நம் குழந்தை என்ன விளையாடிக் கொண்டு இருக்கின்றான் என்று அவர்கள் கையில் வைத்திருக்கும் ஸ்மார்ட் போனை பிடிங்கி பார்த்துவிட்டு அப்பாடா! நமது மகன் ஆபத்தான புழுவைல் கேமை விளையாடவில்லை என்று பெருமூச்சி விட்டுக்கொண்டோம்.

அவர்கள் தினம் மணிக்கணக்கில் விளையாடும் மற்ற வீடியோ கேம் புழுவைலை கேமுக்கு சிறிதும் ஆபத்தில் குறைந்தது அல்ல. புழுவைல் ஒரே அடியாக உயிரை பறித்து விடுகிறது மற்றதோ குழந்தைகளை படிப்படியாக கொன்றுவிடும்.

வீடியோ கேம் வணிகத்துக்காக மட்டும் உருவாக்கப்படுவதில்லை. தொழில் நுட்ப ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதிக அளவு இளைஞர்கள் சக்திகள் கொண்ட தேசத்தை வீழ்த்தும் தொழில் நுட்ப ஆயுதம் இந்த வீடியோ கேம். அதன் மூலம் குழந்தைகளின், இளைஞர்களின் இன்றியமையாத சிந்தனையை நாசமாக்குவது, மழுங்கடிப்பது பல்வேறு வீடியோ கேம்கள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்டுள்ளது. அவைகள் வன்முறை, ஆபாசம், திருட்டு மற்றும் போதைக்கு அடிமை ஆகுதல் போன்ற தீய காரியங்களை நிகழ வழிவகுக்கின்றன மற்றும் சிந்தனையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது என்று தடைவிதித்த அதிகாரிகள் விளக்கமளிக்கின்றனர்.

ஆபத்தான கேம்களை உருவாக்கி இளைஞர்களை தற்கொலைக்குத் தூண்டும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் எனும் செய்தி நம்மை மேலும் கதிகலங்க வைக்கிறது.

இப்போதெல்லாம் தெருக்களில் குழந்தைகள் ஓடி, ஆடி விளையாடுவதை பார்க்க முடிவதில்லை, பள்ளி வாரவிடுமுறையில் கிரிக்கெட் பேட் தூக்கிக் கொண்டு மகிழ்ச்சியாக விளையாடபோகும் குழந்தைகளை காண்பது அரிதாக உள்ளது. ஒவ்வொரு வீட்டின் அறையில் ஓரமாக ஸ்மார்ட்போனை கையில் வைத்து கொண்டு வீடியோ கேம் என்ற ஆபத்தான உலகில், அவர்களது மொத்த உணர்வுகளையும் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். நமது குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுவதை விரும்பாத நாம், அவர்களை மிகவும் அக்கரையுடன் வளர்க்கும் நாம் வீடியோ கேம் என்ற ஆபாயகரமான ஆபத்தை அவர்களுக்கு கொடுத்து விடுகிறோம். அவர்கள் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம். அதன் விளைவுகளை ஆராய்ந்தால், அது அவர்களின் ஆரோக்கியத்தையும், அறிவையும் எப்படி சிதைக்கிறது என்று விளங்கி கொள்வோம். ஒரு குழந்தையின் ஆரோக்கியமாக, அறிவாக வளர மூன்று விசயம் தேவை. ஆரோக்கியமான உணவு, நல்ல தூக்கம், தினம் ஒரு மணி நேரம் ஓடி, ஆடி மற்ற குழந்தைகளுடன் விளையாட வேண்டும். ஒரு குழந்தையின் குறைவான உடல் அசைவினால் ரத்த அழுத்தம், உடல் பருமன் சுறுசுறுப்பின்மை, முதுகு தண்டுவளப்பிரச்சனைஇ அதிக வெளிச்சம், இரைச்சலினால், கண் பார்வை கோளாறு, மனச் சிதைவு, ஒற்றைத்தலைவலி, தூக்கத்தில் பல பிரச்சனைகள் (தூக்கத்தில் உடல் அதிர்வு, நடப்பது, பேசுவது) முறையற்ற உணவு பழக்கம் மற்றும்; பிற்காலத்தில் அவர்கள் சுகாதாரம், ஆரோக்கியத்தில் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தும் என பட்டியல் நீளுகிறது.

இப்பிரச்சனை இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, 3-18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடம், 3.6மூ அளவிற்கு உயர் ரத்தஅழுத்த பிரச்சனை உள்ளது. அதேசமயம், சீனாவைப் பொறுத்தவரை, 8 முதல் 17 வயது வரையிலான பள்ளி குழந்தைகளிடம் 17.4மூ அளவிற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளது. குழந்தைகளின் பொழுது போக்கை ஆரோக்கியமாக ஆக்குங்கள். வேண்டாம் இந்த விபரீதம், நல்ல ஓடி ஆடும் விளையாட்டை கற்றுக்கொடுங்கள், புத்தகங்களை வாசித்து நல்ல கதைகளை சொல்லுங்கள்.

அனைத்துத் தொழில்நுட்பங்களிடம் நல்லது கெட்டது இருக்கவே செய்கின்றன. நாம் அதை சரியாக அணுகும் விதத்திலேயும், அதை அளவுடன் பயன்படுத்துவதில் தான் அதற்கான பலனை பெற்றுக்கொண்டு இருக்கிறோம். பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளில் வீடியோ கேமை பல்வேறு பயிற்சிகளுக்கும் ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கும் பயன்படுத்துகின்றன. விமான ஓட்டிகள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்களது திறனை மேம்படுத்தவும்; பயன்படுத்துக்கின்றனர். நாமும் இந்த வீடியோகேமை நல்ல வழியில் பயன்படுத்த நமது குழந்தைகளுக்கு வழிகாட்ட முடியும். குழந்தைகள் ஞாபக சக்திகள், கணித புதிர் பயிற்சிகள், புதிர்கள், வினாவிடை மற்றும் மொழித்திறனை மேம்படுத்தும் பல்வேறு பயனுள்ள கேம்கள் இணையதளத்தில் இருக்கின்றன. அவற்றை குழந்தைகளுக்கு அறிமுப்படுத்தலாம். மேலும் அந்த கேம் விளையாடுவதற்கு அதிகபட்சம் அரைமணி நேரம் மட்டுமே ஒதுக்குங்கள். குறைந்தது ஒரு மணி நேரமாவது இயற்கையான சூழலில் மற்ற குழந்தைகளுடன் ஓடி விளையாட அனுமதியுங்கள். அவை உடலுக்கும், மனதுக்கும், அறிவுக்கும், ஆரோக்கியத்தையும், உற்சாகத்தையும் அளிக்கும். அது மட்டுமில்லாமல் நமது பாரம்பரிய வீர விளையாட்டுகளும் அழியாமல் பாதுகாக்கலாம்.

குழந்தைகள் நம்மை தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் ஏதோ ஒன்றை விளையாடிவிட்டு போகட்டும் என்று அலட்சியமாக இருந்தால் அது அவர்களின் வாழ்க்கையை சிறிது சிறிதாக அழித்துவிடும். இறுதியில் புலம்பி எந்த பயனும் ஏற்படப்போவது இல்லை நமது குழந்தைகள் தான் நமது வாழ்வும் எதிர்காலமும்.

-அன்வர் திவான்.மு