தூக்கிலிடப் பட்ட இந்திய சுதந்திர போராட்ட வீரர் அஷ்ஃபாகுல்லாஹ் கான் மீண்டும் புறக்கணிப்பு! Featured

Monday, 23 October 2017 11:03 Published in வாசகர்

ந்திய சுதந்திர போராட்ட வீரர் அஷ்ஃபாகுல்லாஹ் கான் அவரது 117 வது பிறந்த தினத்தில் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

உத்திர பிரதேச மாநிலம் ஷாஜன்பூர் மாவட்டத்டில் ஷஃபிக்குர் ரஹ்மான் மற்றும் மஜாருன்னிஷா தம்பதிகளுக்கு இளைய மகனாக 1900 ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி அஷ்ஃபாகுல்லாஹ் கான் பிறாந்தார்.

அஷ்ஃப்குல்லா கான் இந்திய சுதந்திர இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர். மஹாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இடம் பெற்றிருந்த அஷ்ஃபகுல்லாஹ் கான் ராம் பிரசாத் பிஸ்மில் என்பவருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். ஒத்துழையாமை இயக்கம் திரும்ப பெற்ற பிறகு அஷ்ஃபகுல்லாஹ் கானும், ராம் பிரசாத் பிஸ்மில் இருவரும் இந்திய சுதந்திரத்திற்காக போராட்டத்தை தீவிர படுத்தினர்.

இந்நிலையில் இருவரும் பிரிட்டிஷ் அரசால் காக்கோரி ரெயில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்பிருப்பதாக பிணையப்பட்டு அவர்கள் இருவரையும் குற்றவாளி என பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. இதனை அடுத்து 1927 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி அஷ்ஃபகுல்லாஹ் கான் மற்றும் ராம் பிரசாத் பிஸ்மில் இருவரும் தூக்கிலிடப்பட்டு கொல்லபட்டனர்.

இந்திய சுதந்திர போராட்ட வீரர் அஷ்ஃபகுல்லாஹ் கான் அவருடைய பிறந்த தினத்தில் கூட அரசால் புறக்கணிக்கப் பட்டுள்ளது தவறான முன்னுதாரணம் என்று பல்வேறு சுதந்திர ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

-குணசேகரன்

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.