அரசியலுக்கு பலியாகும் இந்தியாவின் உயர்கல்வி! Featured

Saturday, 30 April 2016 20:47 Published in வாசகர்

இந்தியாவில் ஆசிரியர்கள் தங்கள் திறமைக்கு சம்பந்தமில்லாத வெவ்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுவது வாடிக்கையே.வாக்குச் சாவடிகளில், மக்கள்தொகை கணக்கெடுப்பு என பல பணிகளில் நீங்கள் ஆசிரியர்களைப் பார்க்கலாம்.

ஆனால் இப்போது இன்னும் ஒரு படி மேலே போய்அரசு நிர்வாகத்திற்கு 'உதவி' செய்வதில் மாணவர்களையும் விட்டுவைக்கப் போவதில்லை என்ற நிலை உருவாகிறது போலும். இந்த பரிணாம வளர்ச்சியில் முன்னணியில் இருப்பது குஜராத் மாநிலம் தான்.

பாஜக ஆளும் குஜராத் மாநில அரசு, 82 'முன்னுரிமையுடைய' தலைப்புகளின் பட்டியலை முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக் காக வழங்கியுள்ளது. அந்தப் பட்டியலில் மத்திய மாநில அரசுகளின் நலத் திட்டங்களே அதிகம் அடங்கியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் செல்லத் திட்டமான ஸ்வச் பாரத், குஜராத் அரசின் கண்ணிய கேளவனி திட்டம், மற்றும் பல திட்டங்கள் இதில் அடங்கியுள்ளன. ஒருவேளை PhD மாணவர்களுக்கு இந்த தலைப்புக்கள் கவர்ச்சியாக இல்லாமல் போனால், இன்னும் பல தலைப்புகள் பட்டியலில் உள்ளது: "சர்தார் படேல் அவாஸ் யோஜனா மற்றும் இந்திரா அவாஸ் யோஜனா ஒரு ஒப்பெட்டு ஆய்வு",
"சிறுபான்மையினர் கல்வி - ஒரு முக்கிய ஆய்வு", "குஜராத் அரசு: வளர்ச்சிக்கான ஒரு நல்லாட்சி", என இன்னும் பல பல தலைப்புக்கள் உள்ளன.

சரியாகச் சொன்னால், தங்களின் விருப்பமான தலைப்பை தேர்ந்தெடுத்து அதை நன்கு ஆய்வு செய்த பின்பு தேர்ந்தெடுக்கும் PhD மாணவர்கள் முன்னரே தயார் செய்யப்பட தலைப்புகளை தேர்ந்தெடுக்கும்படி அழுத்தம் கொடுக்கப் படுகிறார்கள். இவ்வாறு முன் தீர்மானிக்கப்பட்ட தலைப்புகளை தட்டில் வைத்து பரிமாறுவதால் மாணவர்களுக்கு தலைப்பை தேர்ந்தெடுக்கும் நேரம் மிச்சமாகும்
போலும். இந்த முன்தீர்மான தலைப்புகளை கல்வி உதவித்தொகை பெறுவதுடன் தொடர்புபடுத்தப் போகிறார்களா - அதாவது ஆசைக்காட்டி அதிக மாணவர்களை விருப்பமில்லாத இந்த தலைப்புகளை தேர்ந்தெடுக்க வைக்கும் நிலை ஏற்படுமா? என்பது குறித்தும் சரியான தெளிவில்லை.

அரசின் இந்த நடவடிக்கையை ஆதரித்து பேசிய ஒரு பல்கலைக்கழக துணை வேந்தர், இதனால் மாணவர்கள் திரட்டும் தகவலகள் அரசு திட்டங்களில் உள்ள குறைகளைக் கலை பயன்படும் என்றார். ஆனால் இவ்வாறு ஆதரவு குரல் எழுப்புபவர்கள் ஒன்றை மறந்துவிட்டனர். அரசு திட்டங்களை மதிப்பேடு செய்வது அதற்க்கான நிறுவனங்களின் வேலையே தவிர, மாணவர்களின் பணி அல்ல. மாணவர்கள் தாமாக முன்வந்து ஆய்வு செய்யலாமே தவிர அவர்களைக் கட்டாயப்படுத்தப்படக் கூடாது என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள்.

அரசுக்கு ஆதரவாக வைக்கப்படும் மற்றொரு வாதம் என்னவென்றால், PhD மாணவர்களெல்லாம் இக்காலத்தில் தங்களின் ஆய்வுகளுக்காக "பொருத்தம்" இல்லாத தலைப்புகளையே தேர்ந்தெடுக்கிறார்களாம். இவ்வாறு வாதிடுபவர்கள் நிச்சயமாக உயர்கல்வியின் நோக்கத்தையே உணராமல் பேசுகிறார்கள்: தேவை, பொருத்தம் என்பதல்ல, புதுபுது தளங்களில் கால்பதிப்பதும், சவாலான அனுமானங்களை எதிர்கொள்வதும், மாணவர்கள் தங்களின் அதீத ஆர்வமுள்ள பிரச்சனைகளை ஆய்வு
செய்வதே மிக்கிய குறிக்கோளாகும். உயர்கல்வியை அவசியமின்றி சேதப்படுத்துவதில்,மத்திய அரசு, நாம் பார்ப்பது போலவே, வெகு தூரத்தில் இல்லை.

திங்கள் அன்று மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பாராளுமன்றத்தில் அறிவிக்கிறார், "அனைத்து ஐஐடி கல்வி கூடங்களுக்கும் சமிஸ்கிருத மொழி பயிற்றுவிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிவியலையும் தொழில்நுட்பங்களையும் இலக்கியங்களில் உள்ளது போல் ஆய்வு செய்ய இது உதவும் ." என்றார்.

இந்தியாவின் உயர்கல்வி திட்டத்தில் எத்தனையோ பிரட்சினைகள் உள்ளன - போதிய கல்வி நிலையங்கள் இல்லை, காலங்கள் போல் முளைக்கும் தரமற்ற கல்வி நிறுவனங்கள், நிதி பற்றாக்குறை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, இப்படி தலையாய பிரட்சினைகளுக்கு நீண்டகால தீர்வு காண அதிக நேரமும் உளமார்ந்த ஈடுபாடும் தேவை. ஆனால் சில அரசியல்வாதிகளோ இதையெல்லாம் செய்ய திறனற்றுப் போய் ஒரு சில தொகுதிகளை திருப்திப் படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள். குஜராத் அரசு மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்புகள் இதை நிரூபிக்கக்கூடியதாக இருக்கிறது.

தமிழில்: முகம்மது ரமீம்.
நன்றி: hindustantimes



Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.