அடுத்த தேர்தல் விழிப்புணர்வுக்காக ஒரு அறிக்கை! Featured

Saturday, 14 May 2016 10:35 Published in வாசகர்

ழக்கம்போல இன்றும் தோட்டத்திற்குத் தண்ணீர் ஊற்றச் சென்றேன்.  மா, மாதுளை, நெல்லி, எலுமிச்சை, நாரத்தை, தேக்கு என சிறு கன்றுகளுக்கு மட்டும் நீர் வார்ப்பது, மற்ற செம்பருத்தி, கருவேப்பிலை, முருங்கை மரங்களைக் கண்டும் காணாததுபோல வந்துவிடுவது என்பதே எனது வாடிக்கை!

ஆனால், காய்ப்பு என்று வந்துவிட்டால், கருவேப்பிலையும், முருங்கையும்தான் வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது.  நாம் எதுவுமே செய்யாமல், நன்றி காட்டாமல் இருந்தும் நமக்குப் பயனளிக்கும் அவை போலத்தான் சில நல்லவர்களும், நல்ல தன்னார்வ அமைப்புகளும் செயல்படுகின்றனர்.

புயலோ, பூகம்பமோ, பின்தங்கியோரின் பிரச்சினைகளோ, இவர்கள்தான் எவ்வித பிரதிபலனும் பாராமல் முன்னின்று உதவுகிறார்கள், உதவிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களில் சிலர் அரசியல் கட்சி சார்ந்து இயங்கினாலும், இவர்களின் நற்செயல்கள் அவர்கள் சார்ந்த கட்சியினால் விளைவது என்று சொல்லிவிட முடியாது.

திரும்பத் திரும்ப முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு பிறரைக் கேள்வி கேட்டே வாழ்ந்துகொண்டிருக்கும் வேதாளம் போல மக்களில் பெரும்பாலோர் இருந்து வருகிறோம்.  ஆனால் அந்த முருங்கை மரத்திற்கு நீர்வார்க்காதவன் போல, நமக்கு உதவுபவர்களை நாடிச்சென்று நமக்காக கொஞ்சம் அதிக சக்தியுடன் பணியாற்றும் வகையில் நாம் உதவுவதேயில்லை, பதவிகளளித்து மேலும் பயன்பெறும் வழிகாணுவதேயில்லை!

சரி, இந்தத் தேர்தலை விடுங்கள், நல்லவன் வெல்வான் என்று வேண்டிக்கொண்டு உங்கள் மனசாட்சிப்படியும், அறிவின் துணைகொண்டும் கொஞ்சம் யோசித்து நல்ல வேட்பாளராக உங்களுக்கு யார் தெரிகிறாரோ அவருக்கு வாக்களித்து விடுங்கள்.

ஆனால், அடுத்து ஒரு தேர்தல் வர இருக்கிறதே (பஞ்சாயத்து தேர்தல்) அதற்காகவாவது இப்போதிருந்தே சில தீர்மானங்களைச் செய்துகொண்டு அவற்றின்படி நடப்பதற்கு களமிறங்குங்கள்:

1. நல்லவர்கள், பிறருக்காக உழைப்பவர்கள், உங்கள் வீடு தேடிவந்து ஓட்டுக்காக ஏன் கெஞ்சி நிற்கவேண்டும்?.  நீங்கள் ஏன் ஒவ்வொரு வார்டிலும் ஒரு குழு அமைத்து, வார்டு வாரியாக ஊர் கூட்டம் போட்டு உங்களில் நல்லவர் ஒருவரை – எக்கட்சி பேதமும் இல்லாமல் – சுயேச்சையாக நிற்கவைத்து வெற்றியடையச் செய்யக்கூடாது?

2.   உள்ளாட்சித் தேர்தலில் கட்டாயமாக கட்சிகளுக்கு மதிப்பளிக்க வேண்டாம்.  இலஞ்சமில்லாமல், உங்கள் ஊருக்கான திட்டங்களை எவர் நிறைவேற்றுவார் என்று மட்டும் பாருங்கள்.

3.   கிட்டத்தட்ட எல்லா ஊராட்சிக்கும் கணினிகளும், அதற்கான பயிற்சிகளும் கொடுக்கப்பட்டு விட்டதாகச் சொல்லப்படுகிறது.  ஆனால் அந்தக் கணினிகள் இன்னும் (ஐந்தாண்டுகளாக) ஒரு மூலையில் மூடிவைக்கப்பட்டுக் கிடக்கிறது.  இதற்கு காரணம், புதிய தொழில் நுட்பம் சார்ந்த மேலாண்மைக்கான அறிவும் பயிற்சியும் பஞ்சாயத்து மட்டத்தில் இல்லாமையே.  எனவே புதிய தொழில் நுட்பம் சார்ந்தவர்கள் இதுபோன்ற விசயங்களில் ஈடுபடவும், அப்படியுள்ளவர்களை ஈடுபடுத்தும் சரியானவர்களைத் தேர்வு செய்யவும் மக்கள் முனைய வேண்டும்.

4.   தேர்தல் காலத்தில் மட்டும் வீடுதேடி வந்து வாக்கு கேட்பவர்களை நிராகரித்துவிட்டு, இப்போதிலிருந்தே உங்கள் வார்டில் உங்களுக்கு உதவக்கூடியவராக எவர் இருக்கிறார் என்று பார்த்து வாக்களியுங்கள்.

5.   நல்ல வார்டு உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து ஒரு நல்ல ஊராட்சி அல்லது நகராட்சியை உருவாக்கிடமுடியும். அப்படி உருவாகும் ஒவ்வொரு அமைப்பிலிருந்தும், மக்களின் தேவைகளை, மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சேவைகளை, திட்டங்களை, மானியங்களை உடனுக்குடன் மக்களுக்கு கிடைக்கச்செய்ய இப்போது இணையதளம் வழியாக, தகவல் பெறும் சட்டம் போன்ற வசதிகளின் வாயிலாக பல உதவிகளை உடனுக்குடன் செய்ய முடியும். இதற்கு பதவிகூட அவசியமில்லை!

6.   உங்கள் ஊர் சார்பாக, ஊராட்சி சார்பாக, வார்டு சார்பாக நீங்கள் எப்படியெல்லாம் (பதவியிலிருந்தாலும் இல்லாவிட்டாலும்) உதவ முடியும் என்பதற்கான பயிற்சி, தேவையான கணினிப் பயன்பாட்டுப் பயிற்சியுடன் இலவசமாக அளிக்க எமது ஒளி அழகிய கடன் அறக்கட்டளை நடத்தும் OLI Academy & Training Institute வழங்கும் விழிப்புணர்வு சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

7.   மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.  தொலைபேசி 224444 பட்டுக்கோட்டை
 
என்.எஸ்.எம். சாகுல் ஹமீது
6, இராமாம்பாள் புரம்,
மதுக்கூர் – 614903
தொலைபேசி: 8675353989
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.  This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Comments   
0 #1 N.S.M. Shahul Hameed 2016-05-15 08:00
நன்றி!
Quote
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.