அமைதிக்கான வித்து: முகப் புத்தகத்திலும் விதைக்க முடியும்! Featured

முகப் புத்தகத்திலிருந்து , மதவெறியை, பிற மத துவேஷத்தை (உங்கள் நட்பு வட்டத்தைப் பொருத்தளவிலாவது) விரட்டியடிக்க நல்ல வழி!

1. நாட்டில் கொலை, கொள்ளை, பயங்கரவாதம் போன்ற எந்தக் குற்றச்செயலானாலும், அவற்றைக் கண்டுபிடித்து தண்டனை பெற்றுத்தரும் தகுதியுள்ள காவல்துறையல்லாத மற்றவர்களின் செய்திகளை நம்பி பிற மதத்தினரின்மீது துவேஷத்தைப் பரப்பும் அறிவிலித்தனமான செய்திகளை பதிவோர், குறைந்த பட்சம் உண்மை தெரிந்தபிறகாவது மன்னிப்பும் வருத்தமும் தெரிவிக்கும் பதிவுகளை நீங்கள் காணும் அதே தளத்தில் அதே பதிவுகளில் வெளிப்படுத்தவில்லையானால்; ஒன்று அவர்கள் ஓடி ஒளிந்துகொண்டுவிட்டார்கள் அல்லது அவர்கள் இயல்பாகவே துவேஷத்தை விதைக்கும் நோக்கமுடையவர்கள் என்பதனைப் புரிந்துகொண்டு; அவர்களை உங்கள் நட்பு வலையத்திலிருந்து நீக்கிவிடுங்கள். அல்லது நீங்கள் நீங்கிவிடுங்கள்.

2. இது பெரிய அரசியல் தலைவரானாலும் சரி, பத்திரிக்கை ஆசிரியரானாலும் சரி, உங்கள் அபிமானத்திற்குரிய பதிவாளரானாலும் சரி.

3. இத்தகையவர்களால், தாங்கள் இருக்கும் மதம்/மார்க்கமும் தீய பெயரெடுக்கிறது; தேசமும் ஒற்றுமையிழக்கிறது!.

4. அதே சமயம், உணர்ச்சி வசப்பட்டு தவறான செய்திகளின் அடிப்படையில் அந்த நேர ஆத்திரத்தில் பதிவிடும் கருத்துக்களுக்கு உடனடியாக மன்னிப்பும் வருத்தமும் தெரிவித்தவர்களை ஆதரியுங்கள். வருந்தித் திருந்தியவர்கள் நிச்சயம் நன்மையை விதைப்பார்கள். ஆகவே அவர்களைத் திருப்பித் தாக்குபவர்களும் துவேஷத்தைத்தான் விதைப்பார்கள் என்பதனையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

துஷ்டர்களைக் கண்டு தூர விலகுவதே சாலச்சிறந்த சகோரத்துவம்!
தொடரும் துக்கத்திலிருந்து தேசத்தைக் காக்கும் சாமர்த்தியம்!

- மதுக்கூர் என்.எஸ்.எம். சாகுல் ஹமீது