சவூதியில் திருமண மண்டபம், ஓட்டல்கள், அரங்கங்களில் நிகழ்ச்சிகள் நடத்த தற்காலிக தடை!

1692

ரியாத் (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக சவூதியில் திருமண மண்டபம், ஓட்டல்கள், அரங்கங்களில் நிகழ்ச்சிகள் நடத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகமெங்கும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, மற்றும் வளைகுடா நாடான ஈரான் ஆகிய நாடுகளில் அதிக அளவில் கொரோனா வைரஸால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அனைத்து நாடுகளும் கொரோனா மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், சவூதி அரேபியாவில் 29 நாடுகளுக்கு விமான பயணங்களை ரத்து செய்துள்ளது அந்நாட்டு அரசு. மேலும் 72 மணி நேரங்களுக்குள் வெளிநாட்டில் உள்ள அனைவரும் சவூதி வந்தடைய கெடு விதிக்கப்பட்டுள்ளது. உம்ரா யாத்திரை மேற்கொள்ளும் வெளி நாட்டினருக்கும் தற்காலிக விசா வழங்கலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகெரட் விற்பனை செய்யக்கூடாது - சவூதி அரேபியாவில் புதிய சட்டம்!

இது இப்படியிருக்க, அதிக அளவில் கூட்டம் கூடும் இடங்களான திருமண மண்டபங்கள், அரங்கங்கள், ஓட்டல்களில் நிகழ்ச்சிகள் நடத்த தற்காலிக தடை விதித்து சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது.