அதிசய சிறுவன்:10 வயதில் 400 மொழிகள்! Featured

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிக்கூடத்தில்…

”குழந்தைகளின் புத்திகூர்மையை மேம்படுத்துவது” தொடர்பான பயிற்சி வகுப்பில் 10 வயது சிறுவன் அக்ரம் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் பேசி எழுதிக், காட்டியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அவனுக்கு 400 மொழிகள் தெரியும் என்பது மிகப் பெரிய பெருமை.

“நான் இப்படியொரு பன்மொழி கலைஞனை என் வாழ்நாளில் பார்த்த்து இல்லை” என்று உணர்ச்சி வசப்படுகிறார், தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம்.

சென்னை மகாகவி பாரதி நகரில் வசிக்கும் அக்ரமிடம் பேசியபோது.

“ஒரு மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்தவும். இறைவனை சரணடையவும் தமிழ், அரமைக், அரபி, ஹிப்ரூ, சமஸ்கிருதம், சைனீஸ் ஆகிய 6 மொழிகள் தேவை. இவற்றில்தான் ஆண்டவன் இந்த உலகத்துக்கு வேதங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. இலக்கியங்கள் இதிகாசங்கள் எல்லாம் தமிழில்தான் உள்ளன. அவை மக்களின் நல்வாழ்க்கையை வலியுறுத்தும் விதமானவை. கடைசியில் இறைவனின் சந்நிதானத்துக்குக் கொண்டு போய் சேர்த்துவிடும்.

அதே மாதிரி “அரமைக்“ என்பது இயேசுநாதர் பேசிய தாய்மொழி. யூதர்களின் புனித மொழி “ஹீப்ரூ” சீனாவின் தத்துவஞானி கன்பூசியஸின் வேதங்கள் கோட்பாடுகள் எல்லாமே “சைனீஸ்” மொழியில் உருவானவை. அடுத்தபடியாக மனிதனின் பொருளாதார வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கானவை ஆங்கிலம், இந்தி, அரபி, ஸ்பானிஷ், பிரெஞ்சு, சைனீஸ் ஆகிய 6 மொழிகள். இவற்றை நாம் கசடற கற்றுத் தேர்ந்தால், நிச்சயமாக பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற இயலும்.

இதற்காக நீங்கள் நூறு, இருநூறு மொழிகளை கற்க வேண்டும் எனகிற அவசியம் இல்லை. மேற்கண்ட 6 மொழிகளை கற்றுத் தேர்ந்தால் போதும். சர்வதேச அளவில் 250 கோடி பேரை தொடர்புகொள்ள முடியும். உதாரணமாக பிரெஞ்சு 29 நாடுகளில் ஆட்சிமொழியாகவும், இரண்டாவது மொழியாகவும் உள்ளது.

அதே மாதிரி ஸ்பானிஷ் (23), அரபி (27) ஆகியவையும் உள்ளன. உலகம் முழுவதும் 95 கோடி பேர் சைனீஸ் பேசுகிறார்கள். இதற்கு அடுத்தபடியாக ஸ்பானிஷ் (34 கோடி), ஆங்கிலம் (32) கோடி மொழிகள் வருகின்றன. திருவள்ளுவரின் “தமிழி” என்பது தமிழ் மாதிரி அல்லாமல்… வேறு மாதிரியான வடிவம் இதனை 4 வயதில் கற்றுக் தேர்ந்தேன். அதே மாதிரி பல்லவர் கால கிரந்தம், வட்டெழுத்து ஆகிய பன்மொழி வடிவங்களை பயின்று வருகிறேன்.

முன்னோரின் பண்டைய தமிழ் இதிகாச-இலக்கியங்களை உரைநடை தமிழ்ப்படுத்தி, அத்தனை மொழிகளில் பெயர்ப்பு செய்ய வேண்டும். இதனால் தமிழின் அருமை-பெருமைகளை உலகம் அறிய வாய்ப்பு ஏற்படும். “தொல்காப்பியம்” என்பது அற்புதமான நூல். அது இலக்கணத்தை மட்டும் போதிக்கவில்லை. அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன. உதாரணமாக… ஆதமை “ஆதன்” என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். “சிவன்”, “சிவம்” மாதிரி “ஆதன்” “ஆதம்” என்பதும் ஒரே வார்த்தைதான். இதே மாதிரி அதில் நிறைய பொக்கிஷ வார்த்தைகளைப் பார்க்க முடியும்“ என்றபடி பேசிக்கொண்டே போகும் அக்ரம்.

சென்னை கொடுங்கையூரில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் “மெட்ரிகுலேஷன்” மேல்நிலைப்பள்ளியில் 5-ம் வகுப்புவரை படித்தான். பிறகு, இஸ்ரேல் மொழியல் கல்விக்கூடத்தில் வாயிலாக பயின்று வருகிறான். அக்ரமின் அப்பா ”மொழிப்பிரியனிடம்” பேசியபோது, “நானும் பன்மொழி கலைஞன். 28 நாடுகளுக்குப் போய் 15 ஆண்டு நடத்தி வருகிறேன். அந்த வகையில் எனக்கு கிடைத்த அனுபவம் அலாதியானது. நான் படிப்பு முடிந்து வெளிமாநிலம்- வெளிநாடுகளில் வேலைக்குப் போனபோதுதான், மொழிகளின் முக்கியத்துவம் புரிந்தது. இந்தி தெரிந்திருந்தால் தான் டெல்லியில் வேலை பார்ப்பது எளிது.

வளைகுடா நாடுகளில் அரபி மொழி தெரிந்தால் நல்லது. மலேசியாவில் மலாய், ஸ்பெயினில் ஸ்பானிஷ், பிரான்சில் பிரென்சு- இப்படி ஒவ்வொரு நாடுகளிலும் அந்தந்த மொழிகளுக்கான புலமை அவசியம்” என்கிற மொழிப்பிரியன். அனைவருக்கும் பன்மொழி திட்டம் என்ற தலைப்பில் ”அக்ரம் கல்வி நிலையம்” சார்பாக உள்நாடு-வெளிநாடுகளில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பாடம் வகுப்புகள் நடத்தி வருகிறார். மனைவி ஆமினா, குடும்பத் தலைவி. இவர்களுக்கு 3 பிள்ளைகள். இரண்டாவது மகள் ஷமீரா, 3-ம் வகுப்பு மாணவி, இர்ஃபான் குட்டிப் பையன்.

சர்வதேச மொழியியல் துறையில் சாதனைகள் படைத்து வரும் அக்ரமை மனதார பாராட்டுவோம்!

தகவல்: பேராசிரியர் செய்யது அஹமது கபீர்

Rate this item
(0 votes)
Last modified on Friday, 10 February 2017 23:45