அமர்நாத் யாத்திரிகர்கள் படுகொலையும் எழும் கேள்விகளும்! Featured

கஷ்மீரில் பேருந்தில் அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 6 பெண்கள் உள்பட 7 யாத்ரீகர்கள் பலி ஆனார்கள். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இவ்விவகாரம் பெரும் நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதேவேளை பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.

தாக்குதலுக்கு உள்ளான பேருந்து குஜராத் யாத்திரிகர்கள் சென்ற பேருந்து ஆகும், அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் பட்டியலில் பேருந்தின் என் இல்லை, மேலும் அதில் சென்ற யாத்திரிகர்களின் பெயர்களும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பதிவு செய்யப்படாததால் எஸ்கார்ட் பாதுகாப்பு அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்று சொல்ல படுகின்றது.

இவையெல்லாம் தவிர பல்வேறு கேள்விகளை இந்த படுகொலை எழுப்புகிறது.

1, ஒரு உயர் பாதுகாப்பு பகுதியில் பதிவு செய்யப்படாத வாகனம் எப்படி அனுமதிக்கப்பட்டது?

2, யாத்திரிகர்கள் திரும்பி வரும் வெளியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிக எச்சரிக்கையுடனும் உயர் பாதுகாப்பும் அளிக்கப்பட்டு வரும் இடத்தில் பதிவு செய்யாத யாத்திரிகர்கள் எப்படி அனுமதிக்கப்பட்டார்கள்?

3, இரவு 7 மணிக்கு பின்பு வாகன போக்குவரத்து அனுமதிக்கபடாத சாலையில் 8 .30 மணிக்கு எப்படி வாகனம் வந்தது?

4, செக் போஸ்ட்-ஐ தாண்டி தான் எல்லா வாகனமும் செல்ல வேண்டும் என்ற நிலையில் தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள பகுதியில் அனுமதி இல்லாத நேரத்தில் பாதுகாப்பு இல்லாமல் வாகனம் செல்ல எப்படி அனுமதிக்கப்பட்டது?

லஷ்கர் இ தொய்பா அமைப்பில் இணைந்து செயல்பட்ட சந்தீப் ஷர்மா உடபட் இருவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Rate this item
(0 votes)
Last modified on Tuesday, 11 July 2017 14:45