என்னது 3 லட்சம் ஃபாலோவரா?: பல்லிளிக்கும் ஊடக லட்சனம்! Featured

Wednesday, 26 July 2017 13:56 Published in சமூக வலைதளம்

குடியரசுத் தலைவர் கோவிந்த் ட்விட்டரில் இணைந்த ஒரு மணி நேரத்தில் முப்பது லட்சம் பேர் அவரைப் பின்தொடர்ந்தனர்.

இப்படி ஒரு சேதியை ரிபப்ளிக், டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஜீ ந்யூஸ், ஃபினான்ஷியல் எக்ஸ்பிரஸ், எகனாமிக் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள், அரசுத்துறைகள் உள்ளிட்டவற்றின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகள் அரசின் டிஜிட்டல் சொத்தாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா பயன்படுத்திய @POTUS என்ற கணக்கு புதிய அதிபராக ட்ரம்ப் பதவியேற்றுக் கொண்டபோது அவரிடம் கையளிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பயன்படுத்திய @PMOIndia ட்விட்டர் கணக்கில் இருந்த பதிவுகள், 2014 தேர்தலுக்குப் பின் வேறு ஒரு கணக்கில் ஆர்கைவ் செய்யப்பட்டு, @PMOIndia கணக்கு பொதுப் பயன்பாட்டுக்கு விடப்பட்டு லக்னோவைச் சேர்ந்த சிறுவன் அதைப் பயன்படுத்தியது தெரிய வந்ததும் ட்விட்டர் நிறுவனம் தலையிட்டு அந்தக் கணக்கை பிரதமர் அலுவலகத்திற்கு மீண்டும் அளித்தது. இந்தக் கணக்கு முறையாக மோதிக்குக் கையளிக்கப்படாமல் இருந்ததை அப்போதைய பாஜக கடுமையாக விமர்சனம் செய்தது ஊடகங்களில் வெளியாகி இருந்தது.

தற்போது குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி பயன்படுத்திய @RashtrapatiBhvn ட்விட்டர் கணக்கில் இருந்த பதிவுகள் @POI13 என்ற கணக்குக்கு மாற்றப்பட்டு அதிகாரப்பூர்வ கணக்கு புதிய தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தக் கணக்கை முன்பு பின்தொடர்ந்தோர் இப்போதும் பின்தொடருகின்றனர்.

சோஷியல் மீடியாவை சில காலம் பயன்படுத்துவோர் கூடப் புரிந்து கொள்ளும் இந்த உண்மையை மறைத்துவிட்டுத்தான் ஊடகங்கள் இதை ஒரு செய்தியாக அதிலும் ஆச்சரியமான செய்தியாக வெளியிடுகின்றன என்றால் இந்த ஊடகங்கள் வழங்கும் செய்திகளின் உண்மைத்தன்மை என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.