இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: பிற பகுதிகள் அக்கம்-பக்கம் இன்னும் எவ்வளவுதான் வேண்டும்?

இன்னும் எவ்வளவுதான் வேண்டும்?

There is enough for everyone’s need, but not enough for everyone’s greed என்றார் மகாத்மா காந்தி.  இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ.  ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு நன்கு பொருந்தும்.

திமுக ஆட்சி காலத்தில் சென்னை, நெற்குன்றத்தில் “Own your house” என்ற பெயரில் உயர் உயர் அதிகாரிகளுக்கான வீட்டு வசதித் திட்டத்தை கொடை வள்ளல் கருணாநிதி உருவாக்கினார்.   இந்தத் திட்டத்தின் படி ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகள் மற்றும், க்ரூப் 1 அதிகாரிகள் மற்றும் இதர அரசு ஊழியர்களுக்கு அடுக்கு மாடி வீடுகள் கட்டிக் கொடுப்பதுதான் திட்டம்.


மஹாராஷ்டிர மாநில முதல்வர் பதவியை பறித்த ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு

இந்தத் திட்டம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான 17 ஏக்கர் நிலத்தில் கட்டப் படுகிறது.  இந்த வாளாகத்தில் மொத்தம் 1016 வீடுகள் கட்டப்  படுகின்றன.  இந்த 1016 வீடுகளில் 608 வீடுகள் உயர் உயர் அதிகாரிகளுக்காக (ஐஏஎஸ், ஐபிஎஸ்) என்றும், 120 வீடுகள் க்ரூப் 1 அதிகாரிகளுக்காக என்றும், 288 வீடுகள் இதர அரசு ஊழியர்களுக்காகவென்றும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.   மொத்தம் உள்ள வீடுகளில் பாதிக்கும் மேற்பட்ட வீடுகளை உயர் அதிகாரிகளுக்கு ஒதுக்கீடு செய்ததில் இருந்தே இந்தத் திட்டம் யாருக்காகவென்பது புரிந்திருக்கும்.

உயர் உயர் அதிகாரிகளுக்கு 2458 சதுர அடி கொண்ட நான்கு படுக்கையறை வசதி கொண்ட வீடுகள் மற்றும் 1923 சதுர அடியில் மூன்று படுக்கையறை வசதி கொண்ட வீடுகளும் வழங்கப் படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இதில் விசித்திரம் என்னவென்றால், ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ள வீடுகளின் விலை ஒரு சதுர அடி ரூபாய் 2442/-.  க்ரூப் 1 அதிகாரிகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ள வீட்டின் விலை ஒரு சதுர அடி ரூபாய் 2894/-.  இதர அரசு ஊழியர்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள வீட்டின் விலை ஒரு சதுர அடி ரூபாய் 2690/-/  எப்படி இருக்கிறது விலை நிர்ணயம்?

இது மட்டுமல்லாமல், அந்த இடத்தில் தற்போதைய சந்தை விலை ஒரு சதுர அடி ரூபாய் 3800 முதல் 5000 வரை போகிறது.   தமிழ்நாடு அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது என்று அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், 300 முதல் 500 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் வகையில் எதற்காக இப்படி ஒரு வீட்டு வசதித் திட்டத்தை உயர் உயர் அதிகாரிகளுக்காக வழங்க வேண்டும்?

நெற்குன்றத்தில் அடுக்கு மாடி விற்பனைக்காக டிசம்பம் மாதம் இணையத்தில் வெளி வந்த விளம்பரம்

இந்த வீட்டு வசதித் திட்டத்திற்காக விதிமுறைகள் மற்றும் நெறிகள் அறிவிக்கப் பட்டது 28.02.2011 அன்று. இந்த அறிவிப்பே மோசடியான அறிவிப்பு என்று தகவல்கள் கூறுகின்றன. தமிழ்நாடு வீட்டு வசதித் வாரியத்தின் மேலாண் இயக்குநரிடமிருந்து உயர் உயர் அதிகாரிகளுக்கு 28.10.2010 அன்று ஒரு கடிதம் அனுப்பப் படுகிறது. அந்தக் கடிதத்தின் படி தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்களுக்காக “Own your housing scheme” என்ற திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.   இந்தத் திட்டத்திற்கான விதிமுறைகள் “Own your housing scheme” என்ற திட்டத்திற்கு வகுக்கப் பட்டுள்ள விதிமுறைகளின் படி பொருந்தும்.  உங்களுக்கு “சின்ன வீடு வேணுமா… பெரிய வீடு வேணுமா…” என்பதை 5 நவம்பர் 2010க்குள் தெரியப்படுத்தவும் என்று அந்தக் கடிதம் தெரிவிக்கிறது.



“Own your housing scheme” என்ற அந்தத் திட்டத்திற்கான விதிமுறைகள் என்று வகுக்கப் படுகின்றன தெரியுமா ? 28.02.2011 அன்று.   அதாவது சரியாக தேர்தல் தேதி அறிவிக்கப் படுவதற்கு சரியாக ஒரு நாள் முன்னதாக அறிவிக்கப் படுகிறது.   அதுவும் அந்த அரசாணை வெளியிடப்படும் நேரத்தைப் பார்த்தீர்களேயானால், 1 மார்ச் 2011 விடியற்காலை 00.59 மணிக்கு பொதுத்துறைச் செயலாளர் பெயரில் பதிவாகியுள்ள தொலைபேசி எண்ணிலிருந்து அனுப்பப் பட்டிருக்கிறது.   எந்த அரசு அலுவலகத்திலாவது இரவு 1 மணிக்கு இப்படி வேலை செய்து பார்த்திருக்கிறீர்களா ?





28.02.2011 அன்று வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியிடப் பட்ட ஒரு திட்டத்திற்கு 5 நவம்பர் 2010 அன்று எப்படி விண்ணப்பிக்க முடியும் ?

சரி.  வெளியிடப்பட்ட இந்த விதிமுறைகளையாவது பின்பற்றியிருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.  இந்த விதிமுறைகளில் விதி எண் 3 (xv) என்ன கூறுகிறது என்றால்

“3 (xv) The applicants who have already availed the benefit of allotment under GDQ from TNHB within the respective corporation limits, of the project will not be considered for allotment in this scheme.”


அரசு விருப்புரிமைக் கோட்டாவில் ஒதுக்கீடு பெற்ற அதிகாரிகள் இந்தத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெற பரிசீலிக்கப் பட மாட்டார்கள் என்பதே இந்த விதி முறை. இதையாவது பின்பற்றியிருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.  ஒரு சாம்பிளுக்கு ஐபிஎஸ் வகையறாவை மட்டும் எடுத்து, ஒப்பீடு செய்து பார்த்ததில், கீழ் கண்ட அதிகாரிகள் அரசு விருப்புரிமைக் கோட்டாவில் ஒதுக்கீடு பெற்றுள்ள விபரம் தெரிய வந்துள்ளது.

Name                                                                     House / Plot / Flat under GDQ

1.  K.P.Maghendran IPS                        Housing Board Plot HIG-A-101,Nolambur Neibhourhood Scheme

2.  S.George,IPS                              HIG 108, Nolabmbur, Chennai

3.  T.K.Rajendran,IPS                          Plot No.946, 10th Street, Mogappair Eri Scheme Chennai

4,  J.K.Tripathy IPS                            HIG C3/924, 10th Street Mogappair Eri Scheme Chennai

5.  C.K.Gandhirajan,IPS                          No.2, 10th Street Mogappair Eri Scheme Chennai

6.  Asuthosh Shukla,IPS                         Plot No. A.1-907. Mogappair Eri Scheme Chennai

7.  C.Sylendra Babu IPS                        Plot No.LIG 959/62 (4 plots) Mogappair Eri Scheme Chennai

8.  Karan Sinha IPS                           Plot No.2, Arignar Anna Nagar West Chennai

9.  S.Rajendran IPS                           HIG Flat No. H-80 F.1 type TNHB Valmiki Nagar Besant Nagar Extension Thiruvanmiyur

10. T.V.Ravichandran IPS                       A1/6, Mogappair Eri Scheme Mogappair West, Chennai. 600 058

11. R.C.Kudawla IPS                           Plot No.955 to 958 Mogappair Eri Scheme Chennai



இவர்கள் அத்தனை பேரும், நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டத்திலும் கீழ்கண்டவாறு ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.

1) K.P.MAGHENDHRAN IPS        Floor No. 11   Flat No. 3

2) S.GEORGE IPS               Floor No. 19   Flat No. 3

3) T.K.RAJENDRAN IPS           Floor No. 9    Flat No. 2

4) J.K.TRIPATHY IPS             Floor No. 10   Flat No. 2

5) C.K.GANDHIRAJAN IPS         Floor No. 18   Flat No. 1

6) ASUTOSH SHUKLA IPS        Floor No. 15   Flat No. 1

7) C.SYLENDRA BABU IPS        Floor No. 11   Flat No.  1

8) KARAN SINGHA IPS          Floor No. 2    Flat No.  1

9) S.RAJENDRAN IPS           Floor No. 3    Flat No.  1

10) T.V.RAVICHANDRAN IPS      Floor No. 9    Flat No.  3

11) R.C.KUDAWLA IPS          Floor No.10    Flat No.  1

இந்த உயர் அதிகாரிகளுக்கு அரசு வழங்கியுள்ள அதிகாரங்களின் படி, இவர்களின்  கீழ் பணியாற்றும், கீழ் நிலை அரசு ஊழியர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் இவர்கள்தான்.  ஒரு அரசு ஊழியர் பணியில் தவறு செய்தாலோ, ஒழுங்கீனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலோ, அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரம் இவர்களிடம் வழங்கப் பட்டிருக்கிறது.    இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் கே.பி.மகேந்திரன் முன்னாள் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர்.   டி.கே.ராஜேந்திரன் இன்னாள் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர்.   திரிபாதி சென்னை மாநகர கமிஷனர்.   ஜார்ஜ் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி. ஸ்நேக் பாபு என்று அழைக்கப் படும் சைலந்திரபாபு வடக்கு மண்டல ஐஜி.  ஸ்நேக் பாபுவுக்கு மட்டும் இருக்கும் மொத்த சொத்துக்கள் என்னென்ன   தெரியுமா ?



1)  சென்னை முகப்பேரில் 2400 சதுர அடி நிலத்தில் வீடு

2)  சென்னை நொளம்பூரில் 4800 சதுர அடி நிலம் (வீரப்பனை சுட்டதுக்காம்)

3)  மதுராந்தகம் விளாங்காட்டில் 3 ஏக்கர் நிலம்

4)  கன்குளம், தம்போடு கிராமத்தில் மனைவி பெயரில் 1.795 ஹெக்டேர் நிலம்

5)  வளத்தோட்டம் கிராமத்தில் மனைவி பெயரில் நிலம்

6)  மனைவி பெயரில் முகப்பேர் ஏரித்திட்டத்தில் 1280 சதுர அடியில் வீடு

7)  திருவள்ளுர் மாவட்டத்தில் மனைவி பெயரில் 591 சதுர அடி நிலம்

8)  காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் கிராமத்தில் மனைவி பெயரில் 50 சென்ட் நிலம்

9)  காஞ்சிபுரம் செய்யாறு தாலுகாவில் மனைவி பெயரில் 2 ஏக்கர் நிலம்.

மேற்கண்ட 11 அதிகாரிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள வீடுகளை ரத்து செய்ய வேண்டும் என்று வீட்டு வசதித் துறைச் செயலருக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.






இந்த விவகாரத்தில் மிகப் பெரிய அயோக்கியத்தனம் செய்யப் பட்டுள்ளது.  அது என்னவென்றால் 1979ம் ஆண்டில், யாருக்கு வீடு ஒதுக்கலாம் என்பதற்கான விதிமுறைகள் வகுக்கப் பட்டன.   அதன் படி, ஏற்கனவே வீடோ /வீட்டு மனையோ/ அடுக்குமாடிக் குடியிருப்போ/ தன் பெயரிலோ, தன் குடும்பத்தினர் பெயரிலோ, இந்தியாவின் எந்த மாநகராட்சி, முதல் நிலை பேரூராட்சியிலோ வைத்திருப்பவர்களுக்கு வீட்டு வசதி வாரியத்தின் ஒதுக்கீடுகள் செய்யப் படக் கூடாது என்பது.



இந்த விதிமுறை இன்று வரை தளர்த்தப்படவில்லை.  ஆனால், இதில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ள 95 சதவிகிதமான உயர் உயர் அதிகாரிகள் அனைவரும் வீடோ, அல்லது வீட்டு மனையோ வைத்திருக்கிறார்கள் என்பதும், அவற்றை தங்கள் சொத்துக் கணக்கில் தெரிவித்திருக்கிறார்கள் என்பதுமே.

சரி இந்த அதிகாரிகளை விடுங்கள்.   இவர்களை விட பேராசைப் பிடித்த அதிகாரி ஒருவர் இருக்கிறார்.   அவர் யாரென்றால், தலைமைத் தகவல் ஆணையராக உள்ள ஸ்ரீபதிதான்.



இவரைப் பற்றி சவுக்கில் பல முறை கேவலமாக எழுதியும் பதவியை ராஜினாமா செய்து விட்டுப் போவேனா என்கிறார்.  அது சரி.. இதெல்லாம் மான ரோஷம் உள்ளவர்கள் செய்வது அல்லவா ?



இந்த ஸ்ரீபதி 30.04.2010ல் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.   நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டத்திற்கான அழைப்புக் கடிதம் முதன் முதலில் அனுப்பப் படுவதே 28 அக்டோபர் 2010ல்.  அப்படி இருக்கும் போது ஏப்ரல் 2010ல் ஓய்வு பெற்ற ஸ்ரீபதிக்கு எப்படி ஒதுக்கீடு செய்ய முடியும் ?   சென்னை அண்ணா நகர் ஆபீசர்ஸ் காலனியில் பிரம்மாண்டமான வீடு கட்டிக் குடியிருக்கும் ஸ்ரீபதிக்கு இன்னும் எவ்வளவுதான் வேண்டும் ? மனிதனின் பேராசைக்கு ஒரு அளவே இல்லையா ?

உயர் அதிகாரிகளே…  நீங்கள் அரசு வழங்கியுள்ள சொகுசுக் கார்களில் சென்னை நகரில் பவனி வரும் போது, சாலையோரங்களிலும், கூவம் நதிக்கரை ஓரத்திலும் வசிப்பவர்களைப் பாருங்கள்.  அவர்கள் கட்டும் வரிப்பணத்தில் தான் உங்களுக்கு சம்பளம் வழங்கப் படுகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.







நபிகள் நாயகம் கூறுவதை சவுக்கு உங்களுக்கு நினைவுபடுத்தக் கடமைப் பட்டுள்ளது. “பசியுள்ள இரண்டு ஓநாய்களை ஆட்டு மந்தையில் விட்டுவிடின் அவை எத்தணை குழப்பத்தை உண்டு பண்ணி விடுமோ, அத்துனை குழப்பத்தை ஒரு மனிதனுடைய பொருளாசையும் பதவி மோகமும் அவனுடைய மார்க்கத்தில் உண்டு பண்ணிவிடும்”.

நன்றி: சவுக்கு

Comments  

 
0 # Warrant Balaw - Law Researcher, Writer 2012-01-04 21:50
அருமையான ஆக்கம். ஆதாரப்பூர்வமான ஆதாரங்களுடன் கூடிய சவுக்கடி சாடல். தொடரட்டும் சவுக்கின் இது போன்ற புலனாய்வுகள்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # AANCHAL ROONGTA 2012-05-19 21:45
GOOD ARTICLE . CORRUPT , LAND GRABBING COPS NEED TO BE REMOVED , BANNED FOR LIFE FROM SERVICE
பதில் | Reply with quote | Quote
 
 
0 # dhanya varghese 2012-05-20 23:20
why can't this article appear on the first page of times of india . let people know about these men .
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)