சார் பெல்ட் போட மறந்துட்டீங்க!

மே 03, 2018 1148

விமானத்தில் இனிமேல் செல்போன் இன்டர்நெட் பயன்படுத்தலாம்!

ஹலோ சொல்றா மாப்ளே!

எங்கடா இருக்கே?

சென்னை மேல பறந்துக்கிட்டு இருக்கேன்!ஃப்ளைட்லேருந்துதான் பேசறேன்!

ஃப்ளைட்ல போன் பேசறதா? ராத்திரி அடிச்சது இன்னும் தெளியலையா? விட்டா தமிழிசையோட தங்கச்சிதான் ஐஸ்வர்யாராய்னு சொல்லுவானுங்க! சரி மூஞ்சில தண்ணியை எடுத்து அடிச்சிக்க! கொஞ்ச நேரம் கழிச்சி கூப்பிடறேன்!

டேய்! டேய்! பாவி வச்சிட்டானே!!

ஹலோ! என்னங்க நான்தான் பேசறேன்!

தெரியுது கல்யாணம் பண்ணதிலேருந்து நீதானே பேசிக்கிட்டிருக்கே! புதுசா எதாவது
சொல்லு!

ப்ளீஸ் சார்! ஃபாஸ்டன் யுவர் சீட் பெல்ட்!வீ ஆர் என்டரிங் டர்புலன்ஸ் ஏரியா!

யாருங்க அது? பொம்பளை கொரலு கேட்குது! ஆபீஸ் வேலையா பெங்களூர் போறேன்னு சொல்லிட்டு எவ கூட சுத்திக்கிட்டு திரியறீங்க! அப்பவே எங்க அப்பச்சி சொல்லுச்சி ஒன் புருஷன் முழியே சரியில்லை பேஸ்புக்ல வேற பொழுதன்னிக்கும் இருக்கான்னு ... பாவி நான் கேட்டேனா?

அடியேய்! நாட்டுப்புறம் நான் ஃப்ளைட்ல இருக்கேன்! ஏர்ஹோஸ்டஸ் பொம்பளை பெல்ட் போட சொல்லிட்டு போவுது!

எங்களுக்கும் தெரியும்! எங்க அப்பச்சி ஃப்ளைட்ல போனா போன் வேலை செய்யாதுன்னு எனக்கு சொல்லி இருக்கு! ஒடம்பு பூரா பொய்யி! அதான் பேண்ட் பெல்ட் போட்டுக்கங்கன்னு சொல்ற அளவுக்கு வந்துட்டாளே!

சார் டீ ஆர் காஃபி?

ஆ! காப்பி டீ வேணுமான்னு கேட்கறாளா?
எங்க வூட்டுக்கு வந்தா எனக்கு காபி டீலாம் புடிக்காது சர்பத் (ஜூஸ்) மட்டும்தான்னு சொல்றது அங்க அவ எது குடுத்தாலும்
சிரிச்சிக்கிட்டே வாங்கிக்கறது! இனி என்ன?
எங்கம்மா வூட்டுக்கு போறேன்!

அடியேய் இருடி இருடி..வெச்சுட்டாளே!

சார் நீங்க எதுவுமே எடுத்துக்கலையே?
யூ வாண்ட் எனிதிங்?

ஏம்மா போன் பேசலாம்னு சொல்லி எங்க உயிரை எடுக்கறீங்க? பேசாம கொஞ்சம் வெஷம் கொடு!

சாரி சார் எங்க கேட்டரிங் சர்வீஸ்ல அந்த
ஆப்ஷன் இல்லை! நிறைய ஆம்பளைங்க அதை கேட்கறாங்க! எங்க கேப்டன்ட சொல்றோம்! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

கிர்ர்ர்ர்ர்!

நன்றி -Mohamed Rafiudeen

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...