ஏம்மா உனக்கு இந்த வேலை - பிரபல நடிகையை விளாசும் நெட்டிசன்கள்!

ஜூலை 12, 2018 1082

சென்னை (12 ஜூலை 2018): இந்த வயசில் உங்களுக்கு இந்த வேலை தேவையா? என்று நடிகை கஸ்தூரியை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

90களில் பிரபலமாக இருந்த நடிகை கஸ்தூரி திருமணத்திற்குப் பிறகு சில காலம் நடிக்காமல் ஓய்வு எடுத்திருந்தார். பின்பு தனியார் சேனலில் ஆங்கரிங் செய்து வந்தார். தற்போது ட்விட்டரில் சர்ச்சையான கருத்துக்களை பதிந்தும் வருகிறார்.

இந்நிலையில் அவரது கவர்ச்சியான போட்டோவை போட்டு இது யார்? என்று சொல்லுங்கள் என்று பதிவிட்டு பலரை கடுப்பேற்றியுள்ளார். இதனால் இந்த வயசில் இது உங்களுக்கு தேவையா? என்று கஸ்தூரியை நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

நடிகை கஸ்தூரி அவ்வப்போது அரசியல் மேடைகளிலும் தலை காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...