செல்ஃபோனே இல்லாமல் செல்ஃபி எடுத்த வாண்டுகள் - வைரலாகும் புகைப்படம்!

பிப்ரவரி 05, 2019 1358

சென்னை (05 பிப் 2019): செல்ஃபோனே இல்லாமல் செருப்பில் செல்ஃபி எடுத்த சிறுசுகளின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நகமும் சதையும் என்ற வார்த்தையை எடுத்துவிட்டு செல்ஃபோனும் செல்ஃபியும் என்று போடும் அளவுக்கு இரண்டும் ஒன்றோடு ஒன்று கலந்து விட்டன.

இந்நிலையில் 2 நாளாக ஒரு போட்டோ இணையத்தை கலங்கடித்து வருகிறது. இதுவும் செல்ஃபிதான். ஆனால் செல்போன் இல்லாத செல்ஃபி. 5 சிறுவர்கள் ஒன்று சேர்ந்து செருப்பை செல்போனாக பிடித்து கொண்டு செல்ஃபி எடுத்துள்ளனர். இவர்கள் 5 பேரும் ஒரு கிராமத்து தெருவில் நின்று கொண்டிருக்கிறார்கள். எல்லாருமே அழுக்கான சட்டையை போட்டிருக்கிறார்கள். தலையை ஒருத்தரும் சீவவில்லை. காலில் செருப்பு இல்லை.

ஆனால் செருப்பை கையில் வைத்துக் கொண்டு செல்ஃபி எடுப்பது போல் நிற்க அதனை பார்த்து அனைவரும் சிரித்தபடி போஸ் கொடுக்கின்றனர்.

கள்ளங்கபடம் இல்லாத அந்த சிறுசுகளின் புகைப்படம் இணையங்களில் வைரலாகி வருகிறது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...