காரைக்கால் (22-07-16): புதுச்சேரிக்கான சென்னை உயர்நீதிமன்ற கிளையை, காரைக்காலில் நிறுவ வலியுறுத்தி, விரைவில் காரைக்காலில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறவுள்ளதாக, தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இயக்க மாநில துணைத்தலைவர் டாக்டர் அனந்தகுமார் அறிவித்துள்ளார்.

காரைக்கால் (22-07-16): காரைக்கால் அரசு மாணவர் விடுதியில் அமைச்சர் கந்தசாமி திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, விடுதி முழுவதும் மதுபாட்டில்கள் சிதறிகிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தவர், படிக்கும்போது மதுப்பழக்கம்வேண்டாம் என மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

பீகார் (21-07-16): கணவன் கட்டிய தாலியை அடகு வைத்து, வீட்டில் கழிவறை கட்டிய ஒரு பெண்ணைப் பற்றி பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது.

காரைக்கால் (21-07-16): காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில், ஒரே குளத்தில் அடுத்தடுத்து தவறி விழுந்து அண்ணன், தம்பி பலியானார்கள்.

காரைக்கால் (21-07-16): காரைக்கால் மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், நவீன மீன் குஞ்சு பொறிப்பகம் மூலம், தரமான கெண்டை மீன் குஞ்சுகள் உற்பத்தி குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.

காரைக்கால் (21-07-16): காரைக்கால் மண்டல விளையாட்டு அபிவிருத்தி மையம் சார்பில், மாநில அளவிலான இரண்டு நாள் சதுரங்க போட்டி நிறைவு பெற்றது.

லண்டன் (20-07-16): உலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர் பட்டம் வென்றுள்ளார்.

சென்னை (20-07-16): ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...