"இதுல வேதமும் விக்ஞ்ஞானமும் சேர்ந்து இருக்குறது. அதனால டபுள் பெனிஃபிட் இருக்கிறதா எனக்குத் தெரிஞ்சது" (கிட்டத்தட்ட ஜக்கி வாசுதேவ் ஸ்டைலில்).

தந்தி என்ற வார்த்தை எப்படி வந்தது என்று ஒரு சின்ன ஆராய்ச்சி. இதில் உள்ள தந்தி என்ற வார்த்தை அவசரத்தை உணர்த்துகிறது என்பது சரி. அப்ப, ‘வ’ என்னது? வம்பு என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

பொன்னியின் செல்வன் நாவலின் முதல் காட்சியில் நாம் காண்பது வந்தியத்தேவனின் புரவி செல்லும் வழியெங்கும் உற்சாகம் பொங்க மக்கள் கொண்டாடும் நாளான ஆடி பதினெட்டு என்றழைக்கப்படும் ஆடிப்பெருக்கு.

மீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தமிழகக் கவர்னர் உரையின் தொடக்கத்தில் ‘வணக்கம்’ என்று தமிழில் கூறி விட்டு ஒரு சில வினாடிகள் இடைவெளி விடவே பார்வையாளர்களிடையே பலத்த கரகோஷம்…

டந்த பொங்கல் பண்டிகை சமயத்தில் தொலைக்காட்சியில் ‘அன்பே அன்பே’ என்று சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் ஓடி வரும் விளம்பரத்தின் போது பாய்ந்து சென்று ரிமோட்டை எடுத்து சேனல் மாற்றியதுண்டென்றால் மேலே தொடரவும். இல்லை, அந்த விளம்பரத்தை ரசித்துப் பார்த்த நபர் நீங்கள் என்றால் நமக்குள்ளே கொஞ்சம் கூட கெமிஸ்ட்ரி இல்லை என்று அர்த்தம்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!