உளுந்துார்பேட்டை அருகே அரசூரில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி டெம்போ, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 2,060 மதுபாட்டில்கள் சிதம்பரத்தில் வைத்து வாகனச் சோதனையின் போது சிக்கியது.

தமிழக முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஏப்ரல் 2ம் தேதி தேர்தல் பிரச்சாரம் துவங்க உள்ளார்.

அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.66.90 காசுகளாக உள்ளது.

முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ. சங்மா இன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.

சென்னை விழுப்புரத்தைச் சேர்ந்த எஸ்.வி.எஸ். மருத்துவ கல்லூரி மாணவிகள் மூன்று பேரின் மர்ம மரணம் சம்பந்தமான வழக்கில் தாளாளர் வாசுகியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு மற்ற இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் அளித்து தீர்ப்பளித்தது உயர்நீதி மன்றம்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் மீது, நடிகர் சங்கத்தில் பலகோடி ரூபாய் ஊழல் செய்ததாக சங்க நிர்வாகிகள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

புதிய இயக்கம் ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்று நெல்லையில் நடைபெற்ற நாடார் பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் எர்ணாவூர் நாராயணன் அறிவித்துள்ளார்.

சென்னை பாரிமுனையில், பூ விற்கும் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட 2 பேரை அரிவாளால் வெட்டிய அப்பெண்ணின் அண்ணன் உள்பட 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!