ஐந்து சோறு பதம்!

டிசம்பர் 13, 2018 1283

ன்னும் 50 ஆண்டுகளுக்கு பிஜேபி ஆட்சிதான் என்று அமித் ஷா கூறி வந்த நிலையில், 5 மாநிலத்தில் சறுக்கியது எப்படி என்று மேலோட்டமாக சிந்தித்தேன்.

மக்களின் மனதில் ஆறா தழும்பாய் இருக்கும் பணமதிப்பு நீக்க அறிவிப்பில் இருந்து தொடங்குவோம்.

ஒரு வட மாநிலம் பேங் வாசலில் கடுமையான கூட்டம் அதை கட்டு படுத்த ஒரு காவலர் மிக பெரிய லத்தி ஒன்றை வைத்து கூட்டத்தை நோக்கி கண் மூக்கு தெரியாமல் அடிக்கிறார், கூட்டம் சிதறி ஓடுகிறது இந்த பரிதாப காட்சி வாட்ஸ் ஆப்பில் பரவ அதை பார்த்து பதறாத உள்ளம் இல்லை. ஏன் இந்த நிலை என் பணத்தை நான் எடுக்க எனக்கு எதுக்கு கட்டுபாடு? எனக்கு எதுக்கு அடி? எனக்கு எதுக்கு மன உளைச்சல்? என்று எனக்கு நானே கேள்வி கேட்டு, எனகு நானே பதில் சொல்லும் நாள் வந்தது அதுதான் "என் ஓட்டு என் உரிமை"

அடுத்து பிஜேபி யில் ஒவ்வொரு மாநிலத்தின் தலைவர் தொடங்கி, எம்.எல்.ஏ, அமைச்சர் வரை மதவாத வெறுப்பு அரசியலை உமிழும் போதும், அதற்காக எதிர்ப்பு வழுக்கும் போதும், இத இததான் நான் எதிர்பார்த்தேன் என்பதுபோல பிரதமர் உள்பட இரண்டு காரியம் செய்வார்கள் ஒன்று வேடிக்கை பார்ப்பது, இரண்டு அமைதி காப்பது.

சர்வதேச அளவில் ரபேல் விமான விவகாரம் வெடிக்கும் போது ஒரு பிரதமர் என்ற முறையில் ஏன் பேச மறுப்பு? என்ற கேள்வி படித்தவர்கள் மத்தியில் உள்ளது.

இன்னொரு சர்வதேச விவகாரத்தை சொல்லாமல் இருக்க முடியாது பாக்கிஸ்தான் பிரதமராக பதவியேற்ற நாள் முதல் இம்ரான் கான் இந்தியாவுடன் நெருங்க கடுமையாக போராடுகிறார் அதை தானே முன் வந்து சொல்லும் போது சம்பர்தாய படி ஒரு அதிபருக்கு ஒரு அதிபர் பதில் சொல்ல வேண்டும் இல்லை ஒரு பிரதமராவது பதில் சொல்ல வேண்டும், ஆனால் இங்கு அமைச்சர்கள் தான் பதில் சொல்வார்கள் அதிலும் பிரதமர் மௌனம். இதில் அதிருப்தி அடைந்த இம்ரான் கான் சொன்ன வார்த்தையை நன்றாக கவனிக்க வேண்டும். பாக்கிஸ்தானுடன் நல்லுறவுக்கு இந்தியா விரும்பவில்லை என்பதற்கு பதிலாக பிஜேபி விரும்பவில்லை என்று சொன்னார். பிஜேபி யை பற்றி ஒரு அண்டை நாட்டு அதிபர் மதித்ததை விட குறைவாகவா சொந்த மக்கள் மதிப்பார்கள்?!

ஆட்சிக்கு வந்து 4 வருடங்களுக்கு மேல் ஆகியும் பிரதமர் ராமர் கோவில் பற்றி வாயே திறக்க வில்லை. ஏன் தெரியுமா? தான் மதவாத கட்சியின் ஒரு அங்கமாக இருந்தாலும் தான் ஒரு மதசார்பற்ற இந்தியாவின் பிரதமர் என்பதை நன்கு விளங்கி வைத்துள்ளார். இது மற்றவர்களுக்கு தெரியவில்லை புரியவில்லை. இப்போது பிரச்சனையை கிளப்ப.... நடுநிலையாளர் மத்தியில் அதிர்ப்தி .

அடுத்து பசு குண்டர்கள் மூலம் கலவரம், படுகொலை. இதற்கு தாமதமாக பிரதமர் என்ற முறையில் காட்டமில்லாத ஒரு போலி கண்டனம் தெரிவித்தார். அந்த கண்டனத்துக்கு பிறகும் படுகொலை தொடர்கிறது.

இந்த 5 மாநில தேர்தல் முடிவு 2019 நாடாளுமன்ற தேர்தலில் மிக வழுவாக எதிரொளிக்கும் காரணம் ஒவ்வொரு தேர்தலிலும் நடுநிலையாளர் கூட்டம் இருக்கும் அந்த கூட்டம் இப்படி யோசித்தால்.... " பிஜேபி க்கு எதிராக அலை இருப்பது தெரியாமல் தவறு செய்துவிட்டோமே.... சரி அடுத்து பார்க்கலாம்!!! "

" ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு அல்ல ஐந்து சோறு பதம் "

அபூ- ஹுமைரா, சென்னை

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...