வாட்சப்பில் அந்தர் பல்டி அடிக்கலாம்!

October 29, 2017
பகிருங்கள்:

சமூக வலைதளங்களில் தகவல் பரிமாற்றத்தில் முன்னணியில் இருக்கும் WhatsApp தளம் தனிநபர்களுக்கு மட்டுமின்றி குழுக்களுக்கும் ஒரே தகவலை எழுத்து, ஒலி, காணொளி, கோப்பு வடிவங்களில் அனுப்பும் வசதியை இலவசமாக வழங்கி வருகிறது.

உலகெங்கும் நூறு கோடிக்கும் அதிகமானோர் தினமும் 250 மில்லியன் (25 கோடி) பயனர்கள் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக வாட்சப் நிறுவனம் தெரிவிக்கிறது.

இதில் பல்வேறு பயன்பாடுகள் இருந்த போதிலும் சில குறைகளும் உள்ளன. தவறுதலாக அனுப்பப்பட்ட தகவல் ஓரிரு நிமிடங்களில் நூற்றுக் கணக்கானோரை அடைந்து விடுவதால் பலருக்கு பல்வேறு சங்கடங்களும் ஏற்படுகின்றன.

ஒரு குழுமத்திற்கு அனுப்ப வேண்டிய தகவலை வேறொரு குழுமத்திற்கோ அல்லது தனிநபருக்கு அனுப்ப வேண்டியதை குழுமத்திற்கோ தவறுதலாக அனுப்பி விட்டால் அதை அழிக்கும் வசதி இல்லாமல் இருந்தது.

தற்போதைய மேம்படுத்தப்பட்ட புதிய செயலியில் அவ்வாறு தவறுதலாக அனுப்பப்பட்ட தகவலை ஏழு நிமிடங்களுக்குள் அழிக்கும் வசதியை வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. திறக்கப்படாத அல்லது வாசிக்கப்படாத தகவலை மட்டுமே மேற்படி அழிக்க முடியும். அனுப்பப்பட்ட தகவலை யாரேனும் மேற்கோள் காட்டியிருந்தால் அழிக்க முடியாது போன்ற சில குறைகள் இதிலும் உண்டு.

மேலும், அனுப்பப்பட்ட எழுத்துவடிவிலான தகவலை திருத்தம் செய்யும் (Edit) வசதியையும் வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

-சின்ன முத்து

தற்போது வாசிக்கப்படுபவை!