விளையாட்டு விபரீதமானது: யூடியூப் லைவ் வீடியோவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

மார்ச் 15, 2018 3518

தான் உருவாக்கும் வீடியோ வைரலாகி உலகமெங்கும் பரவ வேண்டும் என்ற ஆசை சமீபத்தில் பலரை வெறி பிடிக்க வைத்துள்ளது. YouTube Live வீடியோவில் தன் பாய் பிரண்டை நிற்க வைத்து, விளையாட்டாக சுட்டு விளையாடியது விபரீதம் ஆனது.

மோனாலிஸா பெரஸ் என்ற 20 வயது பெண் அமெரிக்காவின் சிகாகோவில் வசிக்கிறார். இவரது யூடியூப் சேனல் இதுவரை 5.3 மில்லியன் பார்வைகளைக் கொண்டது. இவருக்கு புகழ் மீது அலாதி ஆசை. வைரல் வீடியோக்களை தயாரித்து பரவ விட்டு புகழ் போதையில் மிதந்த இவருக்கு, சமீபத்தில் விபரீத ஆசை வந்திருக்கிறது. அந்த ஆசையை தனது டிவிட்டரில் பதிவிட்டு நாள், நேரத்தை அறிவித்திருக்கிறார் மோனாலிஸா.

தனது பாய் பிரண்ட் பெட்ரொ என்பவரை, யூட்யூப் நேரலை-யில் ஒரு புத்தகத்தைக் கையில் கொடுத்து நிற்குமாறு கேட்டிருக்கிறார். துப்பாக்கி சூட்டை புத்தகம் தாங்கிக் கொள்ளும், இந்த விஷப் பரீட்சை பல கோடி ஹிட்ஸ் பெறும் என்று போட்ட மனக்கணக்கு தவறாகிப் போனது. புத்தகத்தைத் துளைத்த துப்பாக்கிக் குண்டு, பாய் பிரண்ட்டின் மார்பில் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

சிகாகோ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். அதிக ஹிட்ஸ், அதிக லைக்ஸ், வாட்ஸ் அப் வைரல் மெசேஜ், யூடியூப் வைரல் வீடியோ என பித்துப் பிடித்து அலையும் புகழ் விரும்பிகளுக்கு இச்சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.

 

<div id="vuukle-comments"></div>

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...