யார் பாவிகள்?

மே 25, 2018 1796

மக்களின் உரிமைக்காகப் போராடும் அக்கறையுடையோரின் கூட்டம்.

இரண்டுக்கும் இடையிலான போராட்டம், உள்ளே தீவிரவாதம் ஊடுறுவிவிட்டது என அரசு சொல்வது மெய்யோ பொய்யோ

அதற்கான தீர்வு? இலக்கின்றி சுட்டு வீழ்த்துவதா?

பாரத மரபு அறிந்த வீரனாக இருந்தால், நிராயுத பாணிகளை நோக்கிக் குறிபார்க்கவும் கூசியிருப்பான்!

ஆனால் அழைத்துவரப்பட்டது ஒரு புதிய ரக துப்பாக்கியைக் கையாளும் தொழில் நுட்ப நிபுணன். அவனது சிந்தனையும் செயலும் அந்த துப்பாக்கி முனை மழுங்காமல் பார்த்துக்கொள்வது மட்டுமே!

மனித நேயமில்லாத ஒரு அதிகாரியின் 'மன்-கீ-பாத்'திலிருந்து வரும் உத்தரவை 'GUN-கீ-பாத்'தாக மாற்றவந்த கடமையாளனுக்கு தமிழும் புரியாது, தமிழரின் வாழ்வும் புரியாது!

ஒவ்வொரு தோட்டாவும் குறிதவறாமல் இலக்குமேல் விழவேண்டும்!

இலட்சங்களை வீழ்த்தினாலும், இலட்சியம் வீழாது என்ற புரிதல் அந்த குறிபார்க்கும் gun, கண் இரண்டுக்கும் கிடையாது!.

"என்ன தெரிகிறது?"

"வானம் தெரிகிறதா?", "இல்லை!"

"பூமி தெரிகிறதா?", "இல்லை!"

"ஒரு கூட்டம் தெரிகிறதா?", "இல்லை!"

"எவருடைய முழங்காலேனும் தெரிகிறதா?", "இல்லை"

"வேறு என்ன தெரிகிறது?"

"ஒரு கண் மட்டும் தெரிகிறது!, கொஞ்சம் நகர்த்தினால், ஒரு மார்பு தெரிகிறது!"

"அவற்றில் இலட்சியம் தெரிகிறதா?"

"புரியவில்லை!"

" தீவிரவாதம் தெரிகிறதா?"

"தீவிரம் தெரிகிறது, தீரம் தெரிகிறது"

"பிறகென்ன? "

பாவிகளையும் அப்பாவிகளையும் பிரித்தெடுக்க முடியாத தொழில் நுட்பம்!.


- N.S.M. ஷாகுல் ஹமீது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...