மோடி அரசின் மறக்க முடியாத நான்கு ஆண்டு சாதனைகள்!

மே 26, 2018 2997

பணமதிப்பு - வங்கி,ஏடிஎம்ல பல பேர் மயங்கி விழுந்து செத்தது.... நாங்கலாம் ரெண்டு ரூபா இல்லாத தடுமாறுனப்போ, உங்க கட்சிகாரங்க வீட்ல மட்டும் ரெண்டாயிரம் நோட்டு மூட்டை மூட்டையா இருந்தது...

கருப்பு பணம் ஒழிப்பு- இதோ அந்த நாட்டுல இருக்கு ,அதோ அந்த நாட்டுல இருக்குனு சொல்லிட்டு, கடைசி வர இன்னும் அந்த கருப்பு பணத்த எங்க கண்ணுல காட்டல...

அக்கவுண்ட்ல 15 லட்சம் - 15 பைசா கூட இன்னும் கிரெடிட் ஆகல... விலைவாசி உயர்வால அக்கவுண்ட்ல 10 பைசா கூடா இல்லாம போனதுதான் மிச்சம்....

பெட்ரோல் ,டீசல் விலை - லிட்டர் 100 ரூபாய் விலையை இன்னும் சில மாதங்களுக்குள்ள தொட்ருவீங்கனு நினைக்கிறோம்...

மாட்டு அரசியல் - நீங்க மாட்டு கோமியம் குடிச்சிட்டு, மக்கள் மாட்டு கறி சாப்பிட்டா சிறை , மாடுக்காக நடந்த பல கொலைகள்

மதக்கலவரம் - அதுக்கு நீங்க கைதேர்ந்தவர்கள்னு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்ல.

நீட் - எங்க ஊர்ல நாங்களே படிக்க கூடாதுனு நீ கொண்டு வந்த விஷப் பரீட்சைய மறக்கல. எங்க புள்ளைகல ராஜஸ்தானுக்கும் , கேரளாக்கும் ஓட விட்டு ,பல அனிதாக்கள கொன்னு , பல அப்பாக்கள கொன்னத மறக்கல..

எங்க ஊர் பல அரசு தேர்வுகளுக்கு அடுத்த ஸ்டேட்காரன உள்ள விட்டு எங்க வாய்ப்புகள நசுக்கிறத மறக்கல.

ஜிஎஸ்டி - நீ சாப்புட்றதுக்கும் சேத்து எங்களுக்கு பில் போட்றது.

கார்ப்பரேட் சாமிகள் - இயற்கை வளங்கள் கொள்ளையோ கொள்ளை.

எடுபுடிகள ஏவிவிட்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் கொலைகள ரசிக்கிறத மறக்கல...

பல லட்ச ரூபாய் மதி்ப்புள்ள உங்க கோட் சூட், தூய்மை இந்தியா திட்டம்னு நீங்க பண்ற காமெடி, #GoBackModi , கௌரிலங்கேஷ் கொலை, நோட்டாவோட உங்களுக்கு இருக்க போட்டினு சொல்லிட்டே போலாம்.

நன்றி- Dhivya Dhuraisamy

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...