ஜக்கி வாசுதேவ், பாபா ராம்தேவ் ஏன் ஸ்டெர்லைட் ஆலையை ஆதரிக்கிறார்கள் தெரியுமா?

ஜூன் 29, 2018 1244

சாமியார்கள்’ பாபா ராமதேவ் மற்றும் ஜக்கி வாசுதேவ் ஆகியோர் தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக சமீபத்தில் கருத்து கூறியுள்ளனர்.

இவர்களின் ஆதரவுக்கு சமூக வலைதள பதிவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் ஏன் ஸ்டெர்லைட் ஆலையை ஆதரிக்கின்றனர்? என்பது குறித்தும் அவர்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

"திரு.ஜக்கிவாசுதேவ், திரு.பாபா ராம்தேவ் இவர்கள் இருவரும் ஈஷா மற்றும் பதாஞ்சலி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை நடத்திக் கொண்டு இருப்பவர்கள். இவர்கள் மற்றொரு கார்ப்பரேட் நிறுவனமான ஸ்டெர்லைடுக்கு ஆதரவாகத்தான் பேசுவார்கள்," என்கிறார் விவேகானந்த் சுப்பாராயன்

"இந்தியாவில் ஆன்மீகவாதி, நடிகர் இருவர் மட்டுமே நாட்டை வழிநடத்த தகுதியானவர்கள் ஏனெனில் மக்கள் அனைவரும் அயோக்கியர்கள்," என்று செந்தில் விஜய் எனும் ஃபேஸ்புக் நேயர் எள்ளலாக பதிவிட்டுள்ளார்.

அய்யா எஜமான் நீங்க எங்க தூத்துக்குடி மக்களோட மக்களால வீட்ல வாழ்நாள் முழுக்க தங்கி அவங்க குடிக்கிற தண்ணிய நீங்களும் குடிக்கிறேன்னு சொல்லுங்க நாங்க எல்லாரும் போராடுறது விட்டிருவோம்," என்று எள்ளலாக கூறியுள்ளார் சோம சுந்தரம்.

"பாஜகவின் கருத்தை மக்களிடம் திணிக்கும் முயற்சி.இவர்களுக்கும் தூத்துக்குடிக்கும் என்ன சம்பந்தம்?இவர்கள் யார் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக பேச?கார்பரேட் கைகூலிகள் இவர்கள். நதிகள் இணைப்பு ராலி என்று இவர் கார்பரேட்டிடம் வாங்கிய பணம் எவ்வளவு?2சாமியாருக்கும் எப்படி இவ்வளவு பணம் வந்தது," என்று கேள்வி எழுப்புகிறார் வினோ ஸ்டாலின் என்பவர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...