எங்க வீட்டில் மட்டும் தண்ணீர் கஷ்டமே இல்லை ஏன் தெரியுமா?

ஜூன் 18, 2019 1275

தமிழகமே தண்ணீர் கஷ்டத்துல இருக்கு.. ஆனா எங்க வீட்லயோ எங்க பக்கத்து வீட்லயோ 24 மணி நேரமும் தாராள வாட்டர் சர்வீஸ்தான்.. காரணம் மழை நீர் சேகரிப்பு..

இத்தனைக்கும் நிலத்தடி நீர் இருந்தாலும் நாங்க பயன்படுத்துறது மழை தண்ணீர்தான்.... நம்மாழ்வார் சொல்லிருக்கார் " தண்ணீர பூமிக்குள்ள தேடாத வானத்துல இருந்து தேடுன்னு" ... இயற்கை குடுக்கிற மழை தண்ணிய கடல்ல கலக்க விட்டுட்டு இப்போ தண்ணீ இல்ல இல்லனு கூப்பாடு போட்றத என்னனு சொல்றது??... மழை நீர் சேகரிப்பு கஷ்டமான விஷயம் இல்ல... சேகரிக்கிற தண்ணிய அந்த வருஷம் ஃபுல்லா பயன்படுத்தலாம்.... அதுமில்லாம அந்த தண்ணீர் கிட்டத்தட்ட 10 வருஷம் கெட்டு போகாது....

தண்ணிய எப்படி சேகரிக்கிறது ???

புதுசா வீடு கட்றவங்க போர்டிகோ-லயோ இல்லது அல்லாது எதாது ஒரு ரூம்லயோ அன்டர் க்ரவுண்ட்லயோ அதாது தரையோட தரையோட தரையா தொட்டி அமைச்சிடுங்க. . உங்களுக்கு எவ்ளோ பெரிய தொட்டி வேணுமோ அவ்ளோ பெரிய தொட்டி அமைச்சிடுங்க...நல்ல ஆழமான பெரிய தொட்டியா அமைக்கலாம். வருடத்துக்கு ஒரு தடவை சுத்தம் செய்ய வசதியா படிக்கட்டும் வச்சிக்கலாம்.... வீட்டுக்கு வெளிய ஏன் தொட்டி அமைக்க கூடாதுன்னா மழை தண்ணீல சூரிய ஒளி பட்டா உடனே புழு வந்துடும்.. அந்த தண்ணிய பயன்படுத்த முடியாத போயிடும்.. அதுக்காகதான் சூரிய வெளிச்சமே படாம ரூம்லயோ போர்டிகோலயோ அன்டர் க்ரவுண்ட்ல அமைக்க சொல்றது... மாடிலயோ ஓட்டுல விழற தண்ணிய பைப் மூலமா தொட்டிக்கு கனெக்ட் பண்ணனும்.. தொட்டிக்குள்ள தண்ணீ விழற பைப்போட எட்ஜ்ல நல்ல துணி வச்சி கட்டிட்டங்கனா ,தண்ணீ ஃபுல்டர் ஆகி நல்ல தண்ணீ தொட்டில சேகரிக்க முடியும்... அந்த தொட்டில இருந்து வாட்டர் டேங்க்குக்கு மோட்டார் மூலமா தண்ணீ ஏத்தி இடைவிடாம தண்ணீர் பயன்படுத்தலாம்... ஒரு சீசன்ல சேகரிக்கிற தண்ணீர் அந்த வருஷம் ஃபுல்லா பயன்படும்...

வீட்டுக்குள்ள அமைக்க முடியாதுனு நினைக்கிறவங்க வீட்டு வெளிய தோட்டத்துல அமைச்சி அத ஒரு அறையா அட்லீஸ்ட் ஆஸ்பெட்டாஸ் ஷீட் போட்டு ஒரு அறையாவும் மாத்தி பயன்படுத்திக்கலாம்..

எல்லார் வீட்டு பாத்ரூம்க்கும் கவர்மெண்ட்டே பக்கெட்ல தண்ணீ கொண்டு வரணும்னு சண்ட போட்டு் டைம் வேஸ்ட் பண்றத விட அட்லீஸ்ட் ,அந்த மழைநீர் சேகரிப்பு அமைப்ப இந்த வருஷமாது உருவாக்குங்க.. கண்டிப்பா அடுத்த வருஷ சம்மர்க்கு கஷ்டப்படமாட்டீங்க !!

- திவ்யா துரைசாமி

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...