நெருக்கடியில் சிக்கியிருக்கும் ரஜினி!

December 31, 2017
பகிருங்கள்:

ரஜினியின் அரசியல் அறிவிப்பு சில ரசிகர்களின் நெருக்கடியே கரணமாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

ரஜினியின் இரண்டு திரைப்படங்கள் விரவில் வெளிவரவுள்ளன. எந்திரன் 2 மற்றும் காலா. இவைகள் இரண்டும் கட்டாய வெற்றியடைய வேண்டும். இல்லையேல் ரஜினியின் அடுத்தகட்டங்கள் கேள்விக்குரியாகிவிடும்.

எனவே இரண்டு திரைப்படங்கள் வெளிவரும் வரை பாவ்லா காட்டிக்கொண்டிருக்கவே அரசியல் அறிவிப்பு என்று சிலர் கருதுகின்றனர்.

தற்போதைய அரசியல் நிகழ்வுகள் ரஜினி அறியாதது அல்ல. மேலும் எம்.ஜி.ஆரைத் தவிர அரசியலில் நுழைந்த மற்ற நடிகர்களின் நிலமையையும் ரஜினி அறிந்தவர். எம்ஜிஆர் அரசியலில் நுழைந்த சூழல் வேறு இப்போதைய சூழல் வேறு.

ஆனால் ரசிகர்கள் ரஜினியை அரசியலில் நுழைக்க பெரும்பாடு பட்டு இப்போது வென்றிருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான ரசிகர்களின் நிலை ரஜினி அரசியலுக்கு வருவது ஏற்புடையது அல்ல என்பதே.

ஆர்.கே.நகர் டிடிவி தினகரனின் வெற்றி தாற்காலிகமானது. அதனை வைத்து ரஜினி மக்களை எடை போட்டாரென்றால் அது முற்றிலும் தவறானது என்கின்றனர் சிலர்.

எப்படியாயினும் ரஜினி தேர்தல் போட்டிக்கு நேரம் கேட்டிருப்பதன் பின்னணியில் அவரின் நிலைப்பாட்டில் மாறுதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.

- தினேஷ்

தற்போது வாசிக்கப்படுபவை!