மோடியின் மொக்கை பேட்டியும் அதன் பின்னணியும்!

January 22, 2018
பகிருங்கள்:

மோடி இந்தியாவின் பிரதமரானது முதல் தொலைக்காட்சி பேட்டிகளை தவிர்த்தே வந்துள்ளார். ஆனால் திடீரென ஜீ. தொலைக்காட்சிக்கும், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கும் பேட்டியளித்துள்ளார்.

குஜராத் கலவரத்தை தொடர்ந்து, சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பலமுறை தண்ணீர் குடித்ததும், மேலும் பேட்டியை பாதியிலேயே நிறுத்தியதும் உலகறிந்த உண்மை.

ஆனால் தற்போதைய நிலமை வேறு. 2019 தேர்தலில், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தாதது பெரிய அளவில் பேசப்படும் என்பதை மோடி உணர்ந்துள்ளார். இந்த விமர்சனத்தை தவிர்ப்பதற்கு, ஜீ தொலைக்காட்சி மற்றும் டைம்ஸ் நவ் ஆகிய தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்துள்ளார். ஆனால் சாமர்த்தியமாக பாஜக தொலைக்காட்சியான ரிபப்ளிக் டிவியை தவிற்த்துவிட்டார். மேலும் குஜராத் தேர்தல் வெற்றி மயிரிழையில் என்பது மோடிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு ஊடகங்களில் பேட்டியளிப்பது மோடிக்கு நிர்பந்தமான ஒன்று என்பதை அவர் அறிந்துள்ளார்.

ஆனால் இம்முறை சிஎன்என் தொலைக்காட்சியில் சிக்கியதுபோல் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக. என்னென்ன கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்பது பாஜக தரப்பிலிருந்து தொலைக்காட்சிக்கு அனுப்பப்பட்டிருக்கக்கூடும். அதனாலேயே, மோடி பெருமையாக மார்தட்டிக் கொள்ளும் வெளியுறவு கொள்கைகள் குறித்து ஒரு கேள்வியும் இல்லை. சீனாவுடனான தோக்லாம் சிக்கல், காஷ்மீர் விவகாரம், முத்தலாக், பாகிஸ்தான் போன்றவை குறித்து ஒரு பதிலும் இல்லை. பசுப்பாதுகாவலர்கள் குறித்து பேச்சு இல்லை. குஜராத்தில் நூலிழையில் பெற்ற வெற்றி குறித்து கேள்விகள் இல்லை.

ஆனால் ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளை பேசாவிட்டால் பேட்டி மேலும் மொக்கையாகிவிடும் என்பதை உணர்ந்து அதனை மட்டும் அதில் சேர்த்துள்ளனர். அதேவேளை அந்த இரண்டு நடவடிக்கைகளை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள் என்று மழுப்பலாகவே பதிலளித்துள்ளார்.

தமிழகம் குறித்து எந்த கேள்வியும் இல்லை பதிலும் இல்லை. ஒக்கிப் புயல் குறித்தோ, மீனவர் பிரச்சினை குறித்தோ எந்த கேள்வியும் இல்லை. எளிமையாக சொன்னால், முழுக்க முழுக்க மழுங்கலான, மொக்கையான பேட்டியாகவே இது அமைந்துள்ளது.

-அன்பழகன்

தற்போது வாசிக்கப்படுபவை!