பான்பராக் முதலாளி விக்ரம் கோத்தாரியும் - ஊடகங்களின் மொள்ளமாரித்தனமும்!

பிப்ரவரி 21, 2018 1391

இந்திய வங்கிகளை கூட்டிப்பெருக்க களமிறங்கியுள்ள தொழிலதிபர் போர்வையில் வலம் வரும் கொள்ளையர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள விக்ரம் கோத்தாரி முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் என்ற தகவல் அம்பலமாகியுள்ளது.

விக்ரம் கோத்தாரியை ஊடகங்கள் ரோடோமேக் பேனா நிறுவன முதலாளி என்றே அறிமுகப்படுத்துகின்றன. ஆனால் உண்மையில் ”பான்பராக்” நிறுவனத்தின் நிறுவனர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பான்பராக் நிறுவனத்தை தொடங்கிய விக்ரம் கோத்தாரி, 1990களின் பிற்பாதியில் சொத்துகளைப் பிரித்த பிறகே ரோடோமேக் நிறுவன உரிமையாளரானார். ஆனால் திட்டமிட்டே ஊடகங்கள் பான்பராக் நிறுவன உரிமையாளர் என்பதை மறைத்து செய்தி வெளியிடுகின்றன.

அதிகாரத்தில் இருப்பவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு குறுகிய காலத்திலேயே பல்வேறு தொழில்நிறுவனங்களை உருவாக்கினார் விக்ரம் கோத்தாரி. ரோட்டோமேக் ஏற்றுமதியகம், கோத்தாரி உணவு மற்றும் வாசனைப் பொருட்கள் நிறுவனம், க்ரவுன் ஆல்பா எழுதும் உபகரணங்கள், மோகன் எஃகு நிறுவனம், ஆர்,.எஃப்.எல். உட்கட்டமைப்பு நிறுவனம், ரேவ் எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் தலைவராக இருக்கிறார் கோத்தாரி.

இது ஏதோ விகரம் கோத்தாரியின் முதல் கொள்ளையல்ல. ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு பரோடா வங்கியால், கடனைத் திரும்பச் செலுத்தாதவர் என அறிவிக்கப்பட்டவர். அலகாபாத் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூனியன் வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் முறைகேடுகள் செய்து, கடன் வழங்குவதற்கான விதிமுறைகளைத் தளர்த்தி கடன் பெற்று வாராக்கடன்களைக் குவித்துள்ளார்.

நீரவ் மோடி விவகாரத்தில் நடைபெற்ற ரூ. 11,500 கோடி மோசடி அம்பலமானதன் தொடர்ச்சியாக விக்ரம் கோத்தாரி அலஹாபாத் மற்றும் யூனியன் வங்கியிலிருந்து முறையே ரூ. 352 கோடி மற்றும் ரூ. 485 கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாத மோசடி அம்பலமானது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், விக்ரம் கோத்தாரி 7 பொதுத்துறை வங்கிகளில் சுமார் 3,695 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார் என சிபிஐ குற்றம்சாட்டியது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த விக்ரம் கோத்தாரி, வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இந்திய அரசின் ”இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின்” சிறந்த ஏற்றுமதியாளர் விருதைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Vikram Kothari, former chairman of pan parag now tangled in controversy for alleged fraud over 3,695 Rs crore taken from different state-owned banks.

-அன்பழகன்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...