கவிதை புதிது, களம் புதிதல்ல - கமலின் அரசியல்!

பிப்ரவரி 23, 2018 1537

கவிதை புதிது, களம் புதிதல்ல! - அரசியலுக்கு கமல் புதிது, அவரின் கூட்டணி?

போகப் போகத் தெரியும்,
வரப்போவது புதிய பாதையா? அல்லது
புதிய போதையா? என்பது!.

அதுவரை, இப்போது கிடைக்கும் செய்திகளின் அடிப்படையில், பதவிக்கு வந்து எங்கெங்கு சுருட்ட, தோண்ட, தூர்வார, திருட, பிச்சையெடுக்க முடியுமோ அந்த வகையிலெல்லாம் 'முத்தெடுத்து' சொத்து சேர்க்கும் பல அரசியல்வியாதிகள் போலல்லாமல், இப்போதே 8 கிராமங்களை தத்தெடுப்பேன் என்பது நல்ல துவக்கம்!. இதனையும் தேர்தலுக்கு சமீபமாய் துவக்காமல் இப்போதே துவக்க வேண்டும்.

குறைந்த பட்சம் அவரின் கட்சியின் ஒவ்வொரு மாவட்டக் குழுவும் அந்த மாவட்டத்தில் சில கல்விக் கூடங்களை, மருத்துவமனைகளை, தத்தெடுப்பதோடு, மக்களின் புகார்களைக் கொண்டு சேர்த்து நிவாரணம் பெறும் அலுவலகங்களை துவக்கலாம். அவற்றை இணையத்தில் இணைத்து அதிகமான புகார் வரும் விசயங்களில் பொதுக்கருத்தை திரட்டி போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லலாம்.

மாதிரி மந்திரிசபை அமைத்து அதற்கு பொறுப்பாளர்களை நியமித்து அவர்கள் மூலம் அன்றாட பிரச்சினைகளைப் பேசவும், புதிய திட்டங்களை முன்வைத்து விவாதங்களைத் துவக்கவும் செய்யலாம்.

ஏற்கனவே கர்நாடகத்தில் பிரகாஷ் ராஜ் சில கிராமங்களை தத்தெடுத்து முன்னேற்றுகிறார். அடுத்து இப்போது ஆந்திராவில், இனி அவரும் தமிழ் நாட்டிலும் ஒரு கிராமத்தை தத்தெடுப்பாராம். ஆகவே, இதுபோன்ற நற்பணிகளில் தொண்டர்களை ஈடுபடுத்தி போஸ்டர் கலாச்சாரம் இல்லாத பழய அரசியலை மீட்டெடுக்க கமல் முன்வரவேண்டும்.

நல்லவற்றை வரவேற்போம்!. வெறும் சொற்சிலம்பம் என்றால் நாமும் எதிர்கொள்வோம்!. கவிதை புதிதாக இருக்கலாம், களம் புதிதல்ல!

கமலைத்தொடர்ந்து ரஜினியும் வரட்டும். அரசியல் களம் எப்படி அமைகிறது என்பதைப் பொருத்து நாமும்!

- N.S.M. ஷாகுல் ஹமீது,

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...