முதல்வரானால் முதலில் இதை செய்யுங்கள்: கமலுக்கு கோரிக்கை!

மார்ச் 28, 2018 895

முதல்வர் பதவி ஏற்றதும் முதல் கையெழுத்து 'லோக் ஆயுக்தாவை' கொண்டுவருவதற்கானதாக இருக்கும் என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதற்கு வரவேற்பு அளிக்கும் அதே சமயம், அவர் எண்ணங்கள் உண்மையாகவே ஊழலை எதிர்ப்பதனையும், லோக்பல், லோக் ஆயுக்தா போன்ற மக்களதிகாரம் பெற்ற நீதி பரிபாலன அமைப்புகளைக் கொண்டுவருவதனை மய்யப்படுத்தியுமே இருக்கும் என்பது உண்மையானால், அவர் உடனடியாக இப்போதே கீழ்கிண்ட சில தொடர் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்:

1. இப்போதே தமிழகத்தில் லோக் ஆயுக்தாவையும், மத்தியில் லோக்பல்-ம் கொண்டுவருவதற்கு வேண்டிய பலமிக்க கோரிக்கையை முன்னெடுக்கவேண்டும். அவரது தொண்டர்கள் இலட்சக் கணக்கில் இருக்கக்கூடும். ஆகவே, அவர்களது இலட்சியமாக இந்தக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டு ஆட்சியாளர்களின் தூக்கத்தைக் கலைத்து தூய நோக்கத்தை வென்றெடுப்பதாக விளங்கச்செய்ய முடியும்.

2. துனிவுடன் மத்திய அரசுக்கு லோக்பல் கொண்டுவர கோரிக்கை வைப்பதோடு, மத்திய அரசு நிர்வாகச் சீர்கேடுகள் பற்றியும், தொடர்ந்து வெளிவரும் நிதி, நீதி பரிபாலண முறைகேடுகள் பற்றியும் வெளிப்படையான விசாரண வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

3. தனது நம்பிக்கையான தளபதிகளை, தகுதி திறமை வாய்ந்த பேச்சாளர்களை நாடெங்கும் வலம்வரச் செய்து மக்களிடையே லோக்பல், லோக் ஆயுக்தா, ஊழல் எதிர்ப்பு, மனித உரிமை பற்றி எடுத்துச் சொல்லியும், இலவசங்களுக்கு மயங்காமல் வாக்களிக்கவேண்டிய அவசியத்தை விளக்கவும் செய்யவேண்டும்.

4. களத்தில் இருக்கும் மற்ற அரசியல் தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு ஊழல் எதிர்ப்பை முன்னெடுத்துச் செல்ல வழிகாண வேண்டும். ஒவ்வொரு அரசியல் தலைவரும் வெவ்வேறு கூட்டங்கள் கூட்டி வெவ்வேறு தலைப்புக்களில் ஊழல் எதிர்ப்புக்குரல்கள் வெளிப்படுவதால் மக்களிடையே ஒவ்வொரு கட்சிகளின் நோக்கம் பற்றிய சந்தேகம்தான் கூடுகிறது.

5. இந்தியாவில் மிகப்பெரும் அரசியல் புரட்சிகள் எல்லாமே ஒரு கூட்டு முயற்சியால் வெற்றிகரமாய் நடத்திக்காட்டப்பட்டது. தனித்தனி இயக்கங்களால் அல்ல என்பதனை உணர்ந்து மக்களதிகாரத்தை ஒருங்கிணைக்கும் பணியையே முதல் பணியாக கமல் கைகொள்ளவேண்டும். கையெழுத்தெல்லாம் பிறகுதான்!.

- N. S. M. ஷாகுல் ஹமீது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...