அமித்ஷாவும் பொன்னம்பலமும்!

ஜூலை 09, 2018 733

பிக்பாஸ் முதல் சீசனைப் போல இல்லை இரண்டாவடு சீசன் என்பதுதான் பொதுமக்களின் பொதுவான பார்வை. ஆனால் அதையும் சர்ச்சையாக்கி பேச வைத்துள்ளனர் இன்று.

நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியான அனந்த் வைத்தியநாதன் பொன்னம்பலத்தை சிறையில் தள்ளிவிட்டு வந்தது கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் நடக்கும் அக்கிரமம் போலவே உள்ளது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக மகத், யாஷிகா, ஷாரிக், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் அடிக்கும் லூட்டி குறித்து பொன்னம்பலம் ஓப்பனாகவே ஒரு கலாச்சார போராளியாக மாறிய நிலையில் குற்றவாளிகளை வெளியில் விட்டுவிட்டு கலாச்சார போராளி பொன்னம்பலத்தை சிறையில் தள்ளியது பொதுவான பார்வையாளர்களுக்கு ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளில் நாம் பார்ப்பதென்பது அதிகபட்சம் ஒரு மணி நேர கன்டென்ட்தான். 24 மணி நேரம் நடக்கும் நிகழ்வுகளில், சுவாரஸ்யமானதையும், ஒளிபரப்பக்கூடிய காட்சிகளையும் மட்டுமே நமக்கு எடிட் செய்து வழங்குகிறார்கள். அதிலும் அவர்கள் காட்டும் கோணங்களின் வழியாக மட்டுமே காண்கிறோம். நாம் பார்த்தறியாத காட்சிகள் பலவும் இருக்கக்கூடும். அவற்றின் இடைவெளிகளை நாம் யூகங்களால் மட்டுமே நிரப்ப வேண்டியிருக்கும். அதைப் பார்த்துதான், நாம் சில முடிவுகளுக்கு வருகிறோம். கெட்டவர் யார்... நல்லவர் யார்... எனத் தீர்மானிக்கிறோம். கடந்த சீசனில் ஓவியாவுக்குக் கோயில் கட்டாத குறையாக ஆராதனை செலுத்தியதும், ஜூலியைப் பார்க்கும் இடத்தில் எல்லாம் தொல்லை படுத்தியதும் இதை வைத்துத்தான். பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாள்களாக நடந்த ஏதோ நிகழ்வுகள் அங்கிருக்கும் சீனியரான பொன்னம்பலத்தை வெகுவாகப் பாதித்திருக்கிறது. முற்போக்காளரான கமலே கவலைப்படும் அளவுக்கு அவை இருப்பதுதான் பெருஞ்சோகம்.

பொன்னம்பலம் சில நேரங்களில் இளையவர்களை கண்டிக்கும்போது ஆபாச வார்த்தைகளை உபயோகப்படுத்தினார் என்பது பெண்கள் தரப்பு வாதம். இந்த சந்து கேப்பில் பாலாஜியும் அவரது மனைவியும் காப்பாற்றப் பட்டுவிட்டனர். அவர்களுக்குள் மேலும் புரிதல் வரவேண்டும் என்பது பொதுமக்கள் அல்லது விஜய் டிவியின் விருப்பமாக இருக்கலாம்.

ஆக யாஷிகா ஆர்மி, ஐஸ்வர்யா ஆர்மி எல்லாம் போய் இப்போதைக்கு பொன்னம்பலம் ஆர்மி உருவாகியுள்ளது.

அதுசரி இந்த கட்டுரைக்கும் தலைப்புக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? இருக்கு. தமிழ்நாட்டுக்கு வரும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து #GobackAmishah ட்ரெண்டாகி வரும் நிலையில் அதை நெட்டிசன்கள் மறக்க இப்போதைக்கு பொன்னம்பலம் கிடைத்துள்ளார்.

-தல தளபதி

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...