அர்ணாப் விவாத நிகழ்ச்சியில் ஸ்மிரிதி இராணியிடம் கமல் திணறியதற்கான காரணம்!

டிசம்பர் 24, 2018 960

ரிபப்ளிக் டிவியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கமல்ஹாசன் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணியிடம் பல சூழ்நிலைகளில் திணறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும், மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணியும் கலந்து கொண்ட விவாத நிகழ்ச்சி ஒன்றை அர்ணாப் கோஸ்வாமி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் எப்போதும் இல்லாத அளவுக்கு கமல் பல சூழ்நிலைகளில் திணறினார்.

பாஜகவை இந்துத்தவா கட்சி என்று வர்ணித்தபோது, ஸ்மிரிதி இராணி இந்துத்வா கட்சிதான் முஸ்லிம் அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்தது என்று பதிலடி கொடுத்தார்.

தேசிய கீதம் விசயத்தில் ஏன் திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார் கமல். அதற்கு பதிலடி கொடுத்த ஸ்மிரிதி இராணி தேசிய கீதத்திற்கு எதிரானவர்கள் நீங்கள் என்று தெரிவித்தபோது கமல் கொஞ்சம் எமோஷனலாகி எழுந்துவிட்டார்.

ஆனால் இதனை பார்த்து அர்ணாப் கோஸ்வாமி இந்த மேடையை நாடக மேடையாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

எப்போது முன்னேற்பாட்டுடன் போகும் கமல் இந்நிகழ்ச்சிக்கு சரிவர தயார் நிலையில் இல்லாமல் போனதே திணறலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த விவாத நிகழ்ச்சியில் பல சூழ்நிலைகளில் கமல் பல்ப் வாங்கியதை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக கமல் தீர ஆராய்ந்து பேசக் கூடியவர் ஆனால் இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து திணறியதனால் பலர் அதிருப்தி அடைந்தனர் என்பதுதான் உண்மை.

-ராமன்

 

இதைப் படிச்சீங்களா?

சபரிமலை விவகாரத்தில் அமைச்சர் ஸ்மிரிதி இராணி அருவருக்கத் தக்க பேச்சு! ...

குடிபோதையில் ஸ்மிரிதி இரானியின் காரை விரட்டி வந்தவர் துரத்தி பிடிப்பு! ...

உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா - ஸ்மிரிதி இராணி அதிர்ச்சி! ...

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...