பொங்கல் ஒரு சாரார் மட்டும் கொண்டாடும் பண்டிகையா?

ஜனவரி 14, 2019 637

பொங்கல் பண்டிகை ஜனவரி 15 2019 உலகத் தமிழர்களால் கொண்டாடப் படுகிறது.

தமிழர் திருநாள் என்று அழைக்கப் படும் இந்த பண்டிகை தமிழர்களின் பொதுவான பண்டிகையாகவே போற்றப் படுகிறது.

சங்க காலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் என்று அழைக்கப் பட்டது

உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். தைப்பொங்கல் பண்டிகை இப்படித்தான் மலர்ந்தது. பல ஆயிரம் ஆண்டுகளை கடந்துள்ள பொங்கல் இன்று உலகத் தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒரு பண்டிகையாக மாறியுள்ளது.

பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது. தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப் படுகிறது.

திமுக ஆட்சிக் காலத்தில் கருணாநிதி தை முதல் நாளை அதாவது பொங்கல் தினத்தை தமிழ் புத்தாண்டு என அறிவித்தார். ஆனால் அவரது ஆட்சிக்குப் பிறகு பொங்கலை தமிழ் புத்தாண்டு என்று சரிவர அழைக்கப் படுவதில்லை.

இது ஒருபுறம் இருக்க பொங்கல் திருநாள் ஒரு சாரார் மட்டுமே கொண்டாடுகிறார்களா? என்றால் அதுவும் இல்லை. இந்துக்கள் மட்டுமே வழிபாட்டு முறையில் பொங்கலை கொண்டாடுகின்றனர். முஸ்லிம்களில் சிலர் அறுவடை முடித்த அரிசியை பொங்கி வழிபாடு என்று இல்லாமல் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கின்றனர். இதுவும் பல பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன.

-அன்பழகன்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...