வீர மரணம் அடைந்த இந்திய வீரர் லான்ஸ் நாயக் நசீர் அஹமதை மறந்ததேனோ!

பிப்ரவரி 16, 2019 1006

நாட்டுக்காக வீர மரணம் அடைந்த வீரர்களில் ஒருவர் லான்ஸ் நாயக் நசீர் அஹமது.

லான்ஸ் நாயக் நசீர் அகமது வானி ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தை சேர்ந்தவர். ஷேகி அஸ்முஜி என்ற கிராமத்தில் வசித்து வந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இவர் இந்திய ராணுவத்தில் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் தீவிரவாதிகளால் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டார். முன்னதாக அவர் 6 தீவிரவாதிகளை சுட்டுக் கொலை செய்தார்.

நசீர் அகமதுவின் உயிர்த்தியாகத்தை போற்றும் வகையில், அவருக்கு அசோக சக்ரா விருதை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி ஜனவரி 2019 26 ஆம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதினை, அவரது தாய் மற்றும் மனைவியிடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலின் போது,6 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றார். கடந்த ஆண்டு நவம்பரில் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடந்தது. அப்போது தீவிரவாதிகள் சுட்டதில், நசீர் அகமது வீர மரணம் அடைந்தார். இந்நிலையில் நசீர் அகமதுவின் உயிர்த்தியாகத்தை போற்றும் வகையில், அவருக்கு அசோக சக்ரா விருதை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதினை, அவரது தாய் மற்றும் மனைவியிடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

-அன்பழகன்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...