சாதிக்கும் சிறிய கட்சிகள் - உறங்கும் முஸ்லிம் கட்சிகள்!

மார்ச் 04, 2019 612

அதிமுக - பாஜக பாமக என்று கூட்டணி ஆளும் வர்க்கங்கள் இந்த தேர்தலில் ஒரு கை பார்க்க தயாராகி விட்டன.

மிகவும் எதிர் பார்க்கப்படும் திமுக கூட்டணி கட்சிகளில் பேச்சுவார்த்தை இழுபறியாகவே உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதி உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையே திமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் அவரவர்களுக்கு தேவையான தொகுதிகளைப் பெற்று தேர்தலுக்கு தயாராகி விட்டன. முஸ்லிம் லீக் கட்சியும் கிடைத்த ஒரு தொகுதியை பெற்று திருப்தி அடைந்த நிலையில், அடுத்த பெரும் கட்சியான மமக பேச்சுவார்த்தை இன்னும் முடிந்த பாடில்லை. முதல் சுற்று பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்றும் தெரியவில்லை.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக நின்று இரண்டு தொகுதிகளை பெற்று விட்டது. மமக இதுவரை அமைதியாக இருக்கிறதா? தொகுதி ஒதுக்கீடில் திருப்தி இல்லையா? என்பது குறித்து மமக அனுதாபிகளின் கேள்வியாக உள்ளது.

இது ஒருபுறம் இருக்க திமுக கூட்டணியில் ஏற்கனவே அவமானப் பட்ட எஸ்டிபிஐ டிடிவி தினகரனுடன் கூட்டணி வைத்து போட்டியிட தயாராகிவிட்டது.

எதுவானாலும் ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து நிற்க வேண்டும் என்ற சாதாரண முஸ்லிம்களின் குரல் எந்த முஸ்லிம் கட்சிகளின் காதுகளிலும் ஒலிக்கவில்லை என்பதே ஒவ்வொரு முஸ்லிமின் வேதனை.

- மிஸ்பாஹுத்தீன்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...