மமகவுக்கு சீட் இல்லாதது திமுக வெற்றிக்கு பின்னடைவா?

மார்ச் 05, 2019 1122

சென்னை (05 மார்ச் 2019): மமகவுக்கு திமுக சீட் மறுக்கப் பட்டுள்ளதை அடுத்து முஸ்லிம்கள் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மமகவுக்கு இன்று திமுக அதிர்ச்சி அளித்தது. சீட் இல்லை ஆதரவு மட்டும் தாருங்கள் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இன்று மாலை மமக தனது முடிவை அறிவிக்கும் என தெரிகிறது. ஒரு வேளை திமுக கூட்டணியில் மமக நீடித்தாலும், சீட் இல்லாததால் மமக தொண்டர்கள் ஆர்வம் இன்றியே தேர்தலில் பணியாற்றுவர் என தெரிகிறது. மேலும் திமுக சீட் கொடுக்காததால் அதிர்ச்சியில் உள்ள மமகவினர் கூட்டணியில் நீடித்தாலும் திமுக கூட்டணிக்கு எதிராக வாக்களிக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால் வாகுகள் பிரியும் அபாயம் உள்ளதாகவும் இது அதிமுக பாஜக கூட்டணிக்கு வாய்ப்பாக அமையும் என்றும் சமூக வலைதளங்களில் கருத்து நிலவுகிறது.

கடந்த சட்ட மன்ற தேர்தலில் மமக 5 சீட் பெற்ற நிலையில் 1 சீட்டை விட்டுக் கொடுததும் நான்கு சீட்களில் மட்டுமே போட்டியிட்டதும் நினைவிருக்கலாம். காங்கிரஸுக்கு 10 சீட் கொடுத்த நிலையில் அவர்களிடம் ஒரு சீட் பெற்று மமகவிற்கு கொடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

-மிஸ்பாஹுத்தீன்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...