25 வருடங்கள் தீவிரவாதிகள் என்ற பொய் முத்திரையுடன் வாழ்ந்த 11 முஸ்லிம்கள்!

மார்ச் 07, 2019 1031

25 வருடங்கள் தீவிரவாதிகள் என்ற பொய் முத்திரையுடன் வாழ்ந்த 11 முஸ்லிம்கள் கடந்த மாதம் 27 ஆம் தேதி வழக்கிலிருந்து விடுதலை செய்யப் பட்டனர்.

1992 பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு முஸ்லிம்களை குறிவைத்து தீவிரவாதிகள் என்ற பட்டம் சூட்டப்பட்டது அது இன்று வரை தொடர்கிறது. இந்நிலையில் 1994 ஆம் ஆண்டு பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்ட 11 முஸ்லிம்களை 25 வருடங்கள் கழித்து நாசிக் சிறப்பு தடா நீதிமன்றம் இவர்கள் 11 பேர் மீதும் தீவிரவாதிகள் என்ற எவ்வித ஆதாரமும் இல்லை என்று விடுதலை செய்துள்ளது.

இந்த 11 பேர், 3 டாக்டர்கள் உடபட சமூக ஆர்வலர்கள் பொறியியலாளர்கள் என சமூகத்தில் உயர் மதிப்பைப் பெற்றவர்கள். ஆனால் சரியான விசாரணை இன்றி இவர்கள் 25 வருடங்களாக தீவிரவாத முத்திரையுடன் வாழ்ந்து வந்தனர்.

தற்போது அவர்கள் விடுதலை செய்யப் பட்டபோதும், இழந்த மதிப்பை திரும்பப் பெற முயற்சிக்கின்றனர்.

இப்படி பல அப்பாவி முஸ்லிம்கள் இன்றும் சிறையில் பொய் குற்றச்சாட்டுகளுடன் வாழ்கின்றனர். அவர்களுக்கு எப்போது விடிவு ஏற்படுமோ?

-மிஸ்பாஹுத்தீன்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...