நயன் தாரா குறித்து ராதாரவி பேசியதில் அப்படி என்ன தவறு?

மார்ச் 28, 2019 456

நடிகர் ராதாரவி நடிகை நயன் தாரா குறித்து பேசியதில் தவறு எதுவும் இல்லை என்பதாகவே பலரும் கருதுகின்றனர்.

நடிகை நயன்தாரா நடிக்கும் படம் ‘கொலையுதிர் காலம்’. படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ஆனால் இந்த படத்தின் இயக்குனர், நடிகை நயன்தாரா ஆகியோர் கலந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. மேலும், இயக்குனர் கரு.பழனியப்பன், ராதாரவி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட சில திரையுலகம் பிரபலங்களே கலந்துகொண்டார்கள்.

அப்போது பேசிய ராதாரவி, எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் எல்லாம் ஒரு லெஜண்ட். அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். நயன்தாரா நல்ல நடிகை, அவர் இவ்வளவு நாட்கள் திரையுலகில் நிலைப்பதே மிகவும் பெரிய விஷயம். ஏனென்றால் அவரைப் பற்றி வராத செய்திகளே கிடையாது. அதெல்லாம் தாண்டி அவர் நிற்கிறார். தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை நான்கு நாட்கள் மட்டுமே நியாபகம் வைத்திருப்பார்கள். பின்னர் விட்டுவிடுவார்கள். நயன்தாராவே ஒரு படத்தில் பேயாகவும் நடிக்கிறார், இன்னொரு புறம் சீதாவாகவும் நடிக்கிறார். இப்போதெல்லாம் யாரு வேண்டுமானாலும் சீதாவாக நடித்துவிட முடிகிறது. முன்பு சீதாவாக நடிக்க வேண்டும் என்றால் கே.ஆர். விஜயாவைதான் தேடுவார்கள். அவரை பார்த்தால் கும்பிடத் தோன்றும். இப்போதெல்லாம் பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம்’ என்று ராதாரவி பேசியுள்ளார். இதனால் ராதாரவியை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே இவர் பெண் நடிகைகளை குறித்து சர்ச்சை ரீதியாக பேசினார்.

இதற்கு நயன் தாராவின் காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்தார். மேலும் திமுகவிலிருந்து ராதாரவியை தாற்காலிகமாக நீக்கமு செய்து கட்சி உத்தரவிட்டது.

இந்நிலையில் ராதாரவிக்கு எதிர்ப்பு குரல் எழும்பும் அதேவேளை ஆதரவு குரலும் வலுக்கிறது. வெளிநாடுகளிலிருந்து ராதாரவிக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்துள்ளனர்.

நயன் தாராவை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு புகழ்வதெல்லாம் சரியில்லை என்பதில் பலரும் உடன் படுகின்றனர். மேலும் நயன் தாரா சிம்பு, பிரபு தேவா உள்ளிட்டவர்களுடன் வெளிப்படையாக பழகி சர்ச்சைக்கு உள்ளானர். பிரபு தேவா பெயரை பச்சை குத்தும் அளவுக்கும் மதம் மாறும் அளவுக்கும் சென்றவர்.

இப்படி இருக்கையில், நயன் தாரா குறித்து ராதாரவி பேசியதில் தவறு இல்லை என்பதே பலரது கருத்தாக உள்ளது. மேலும் பல விசயங்கள் இருக்க இவ்விவகாரத்தில் மட்டும் ஸ்டாலின் உடனடி குரல் கொடுத்ததற்கு பலரும் ஸ்டாலினை விமர்சித்து வருகின்றனர். அதேவேளை ராதாராவியை திமுகவிலிருந்து நீக்கம் செய்தது சரியான நடவடிக்கை என்பதும் பலரது கருத்தாக உள்ளது.

-அன்பழகன்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...