பாக்கவிக்கு வாக்களித்தால் துரைகளுக்கு சவுக்கடி கொடுக்கலாம்!

மார்ச் 30, 2019 1646

மத்திய சென்னையில் எஸ்டிபிஐ சார்பாக போட்டியிடும் அதன் மாநில தலைவர் தெஹ்லான் பாக்கவி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு மிகப்பெரிய நெருக்கடியாக உள்ளார் என்பது தற்போதைய தகவல்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தினகரனின் அமுமுக உடன் கூட்டணி அமைத்து எஸ்டிபிஐ கட்சி போட்டியிடுகிறது. தமிழகம் சார்பாக நாடாளுமன்றத்தில் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு நேர்மையாக குரல் கொடுக்கக் கூடியவராக தெஹ்லான் பாக்கவி இருப்பார் என்பது பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது. மேலும் கார்பரேட் நிறுவனம் மூலம் அவ்வப்போது பாஜகவுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்டு வரும் சன் டிவி உரிமையாளர்களில் ஒருவரான தயாநிதி மாறன் மீண்டும் அங்கு போட்டியிடுவது மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக நிர்வாகிகளுக்கே தயாநிதி மாறனை பிடிக்கவில்லை என்றே கூறலாம்.

மேலும் திமுகவில் முஸ்லிம் நிர்வாகிகளை வளர விடாமல் தடுப்பது அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் என்ற கருத்தும் நிலவுகின்றது. இந்நிலையில் பலவகைகளில் ஒப்பிட்டுப் பார்த்தால் தயாநிதி மாறனை விட தெஹ்லான் பாக்கவிக்கு ஒரு வாய்ப்பளித்துப் பார்க்கலாம் என்று மத்திய சென்னை தொகுதி மக்கள் நினைப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவில் தமிழகத்தில் திமுக அலை வீசினாலும், மத்திய சென்னையைப் பொறுத்தவரை தயாநிதி மாறனுக்கு மிகப்பெரிய போட்டியாக தெஹ்லான் பாக்கவி இருப்பார் என்று கருதப்படுகிறது.

-சின்ன முத்து

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...