ஜூனியர் உலகக் கோப்பையை வென்று பிசிசிஐ சாதனை!

பிப்ரவரி 03, 2018 501

வெலிங்டன்(03 பிப் 2018): 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்று மீண்டும் பிசிசிஐ சாதனை படைத்துள்ளது.

நியூசிலாந்தில் நடைபெறும் ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிசிசிஐ அணி ஆஸ்திரேலியாவை சந்தித்தது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஜெசன் சங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். ஜோனாதன் மெர்லோ 76 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் 216 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிசிசிஐ களம் இறங்கியது. பிசிசிஐ 38.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹார்விக் தேசாய் 61 பந்தில் 5 பவுண்டரியுடன் 47 ரன்கள் எடுத்தும், மன்ஜோத் கல்ரா 102 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 101 ரன்கள் எடுத்தும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 4 முறை உலக கோப்பையை வென்ற ஒரே ஜூனியர் அணி பிசிசை அணிதான் என்ற பெருமையை இந்த வெற்றி ஈட்டிக் கொடுத்துள்ளது. 2000, 2008, 2012 மற்றும் 2018 ஆகிய வருடங்களில் பிசிசிஐ அணி ஜூனியர் உலக கோப்பையை வென்றுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...