கிரிக்கெட் வீரர் முஹம்மது சமி மீது இன்னொரு குற்றச் சாட்டு!

மார்ச் 14, 2018 753

மும்பை (14 மார்ச் 2018): கிரிக்கெட் வீரர் முஹம்மது சமி மீது அவரது மனைவி அளித்துள்ள குற்றச் சாட்டின் அடிப்படையில் அவர் மீது ஊழல் தடுப்புப் பிரிவினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் முகமது சமி. இவர் மீது அவரது மனைவி ஹசின் ஜகான் பல்வேறு புகார்களை கூறி இருந்தார். குறிப்பாக சமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் முஹம்மது சமி மீது கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஹசின் ஜஹான் குற்றம் சாட்டியுள்ளார். இதன் அடிப்படையில் ஊழல் தடுப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அவரது வெளிநாட்டு சுற்றுப் பயணம் குறித்தும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...