கிரிக்கெட்: கெத்து காட்டிய வங்க தேசம் அணி!

March 17, 2018

கொழும்பு (17 மார்ச் 2018) நிடஹாஸ் முத்தரப்பு டி-20 தொடரில் இலங்கை அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது வங்க தேசம் அணி.

இறுதிப் போட்டியில் இந்தியாவை சந்திக்கப் போவது யார் என்ற போட்டியில் இலங்கை - பங்களாதேஷத்துக்கு இடையிலான டி20 போட்டி நேற்று கொழும்பு பிரம்மதேசா மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய தனுஷ்கா குணதிலகா 4 ரன்களிலும், குஷால் மென்டீஸ் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய குஷால் பெரிரா அதிரடியாக ஆடி 61 ரன்கள் குவித்தார். அதேப்போல திஷாரா பெராரா 58 ரன்கள் குவித்தார். இலங்கை அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது.

பங்களாதேஷில் தொடக்கவீரராக களமிறங்கிய தமிம் இக்பால் 50 ரன்கள் குவித்தார். மஹ்மத்துல்லாவும் அதிரடியாக ஆடி 43 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்களும் ரன்களைச் சேர்த்தனர். இறுதி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற போது நடுவர் சரியாக செயல்பட வில்லை என்பதை காரணம் காட்டி வங்க தேச அணி தலைவர் போட்டியை பாதியில் நிறுத்த நினைத்தார் ஆனால் பேட்ஸ் மேன் அதற்கு சம்மதிக்க மறுத்த நிலையில் இறுதி ஓவரில் நினைத்ததை முடித்து பங்களாதேஷ் அணி 19.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதனையடுத்து, பங்களாதேஷ் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!