பிசிசிஐ கிரிக்கெட் வீரர் முஹம்மது சமி கார் விபத்தில் காயம்!

மார்ச் 25, 2018 670

புதுடெல்லி (25 மார்ச் 2018): பிசிசிஐ அணியில் வேகப் பந்து வீச்சாளர் முஹம்மது சமி சென்ற கார் விபத்துக்குள்ளாகி உள்ளது.

டேராடூனில் இருந்து டெல்லி சென்ற போது நெடுஞ்சாலையில் கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இதில் ஷமிக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சமியின் மனைவி முஹம்மது சமி மீது பாலியல், மேட்ச் பிக்சிங் உள்ளிட்ட புகார்களை அளித்தார். அதில் இருந்து தற்போதுதான் இவர் விடுவிக்கப்பட்டு பிசிசிஐ ஒப்பந்தம் மீண்டும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...