புகழ் பெற்ற கால்பந்து வீரர் கவலைக்கிடம்!

ஏப்ரல் 01, 2018 569

லண்டன் (01 ஏப்ரல் 2018): இங்கிலாந்தின் புகழ் பெற்ற முன்னாள் கால் பந்து வீரர் ராய் வில்கின்ஸ் (61) கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு கவலைக் கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து கால்பந்தாட்ட குழுவின் முன்னாள் கேப்டன் புகழ்பெற்ற ராய் வில்கின்ஸ். இவருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து லண்டன் புனித தாமஸ் ஜார்ஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மான்செஸ்டர் யுனைடெட், ஏசி மிலன், ரேன்ஞ்சர், QPR, போன்ற அணிகளுக்காக விளையாடியவர் வில்கின்ஸ். இவர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் மற்றும் டாக்ஸ்போர்ட்ஸில் பண்டிதராகவும் இருந்துள்ளார். கோப்பையில் மான்செஸ்டர் யூனைடேட்க்காக 1983லும். 1989ல் ரேன்ஞ்சருக்காக ஸ்காட்டிஸ் லீக்கிலும் ஆட்டநாயகன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...