ராணுவ உடையில் பத்ம பூஷண் விருதை பெற்றார் தோனி!

ஏப்ரல் 02, 2018 598

புதுடெல்லி (02 ஏப் 2018): ராணுவ உடை அணிந்து பிசிசிஐ முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி பத்ம பூஷண் விருது பெற்றார்.

2017-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் கிரிக்கெட் வீரர் தோனி பத்மபூஷண் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். தோனியின் பெயரை இந்திய கிரிக்கெட் வாரியம் அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. தோனி இந்திய கிரிக்கெட் அணிக்குச் சிறந்த பங்களிப்பை அளித்திருக்கிறார். அவருடைய தலைமையில் இந்திய அணி 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பைகளை வென்றது. டெஸ்ட் அரங்கிலும் சிறந்த இடத்தைப் பிடித்தது. இதனால் இவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் இரண்டாம் கட்ட விழாவில் தோணி குடியரசுத் தலைவர் கையிலிருந்து விருதை பெற்றார். அப்போது தோனி ராணுவ உடை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...