ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை?

ஏப்ரல் 04, 2018 600

சென்னை (04 ஏப் 2018): ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப் பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் 11 வது ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கவுள்ளன. இந்நிலையில் ஐ.பி.எல்.போட்டிகளில் சூதாட்டம் நடைபெறுவதாகவும், சூதாட்டத்தை தடை செய்யாமல் ஐ.பி.எல்.போட்டிக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சூதாட்ட புகாரில் சிக்கி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் என்பவர் மனு அளித்துள்ளார்.

இதனை அடுத்து மனுவை விசாரித்த நீதிமன்றம் பிசிசிஐக்கு இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...