காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர்!

ஏப்ரல் 07, 2018 505

கோல்டு கோஸ்ட் (07ஏப் 2018): ஆஸ்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்துவரும் காமன்வெல்த் போட்டியில் 77 கிலோ எடைதூக்கும் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பளு தூக்கும் வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கம் வென்றுள்ளார். பளுதூக்குவதில் 144 கிலோ மற்றும் 173 கிலோ எடை பிரிவு என மொத்தம் 317 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இவர் ஏற்கனவே 2014-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர். இதுவரை நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இவர் மொத்தம் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த சதீஷ்குமார் தனது தந்தையின் ஊக்குவிப்பால் தனது 12-வது வயதிலிருந்து பளுதூக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டு மாவட்ட அளவிலும் பின்பு மாநில அளவிலும் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...