சென்னை ஐபிஎல் போட்டிகள் இட மாற்றம்?

ஏப்ரல் 08, 2018 580

சென்னை (08 ஏப் 2018): சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் இடமாற்றப் படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் மற்றும் ஸ்டெர்லைட் ஆகியவற்றிற்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வலுத்து வரும் நிலையில், சென்னையில் நடைபெறு ஐபிஎல் போட்டியில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தை முற்றுகை இடப் போவதாக அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டியை இடம்மாற்றம் செய்வது பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது. சென்னையில் இருந்து திருவனந்தபுரம் அல்லது கொச்சிக்கு மாற்றுவது பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இடம் மாற்றம் பற்றி ஆலோசனை நடப்பதாக கேரள கிரிக்கெட் சங்க நிர்வாகி ஜெயேஷ் பேட்டியளித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் பேசியதாக ஜெயேஷ் தகவல் தெரிவித்துள்ளார். பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகிகள் ராஜூவ்சுக்லாவும் என்னுடன் பேசினர் என்று கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...