சென்னை: ஐபிஎல் அனைத்து போட்டிகளும் இட மாற்றம்!

ஏப்ரல் 11, 2018 577

சென்னை (12 ஏப் 2018): சென்னையில் நடைபெற இருந்த அனைத்து ஐபிஎல் போட்டிகளும் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்னையில் ஐபிஎல் போட்டியை நடக்க விடமாட்டோம் என தமிழ் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. மேலும் காவிரி பிரச்சனை தீரும் வரை ஐபிஎல் போட்டி சென்னையில் நடத்த கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஐபிஎல் போட்டிக்கு எதிராக சென்னையில் நேற்று தீவிர போராட்டம் நடைபெற்றது. இதனால் ஒரு வித பதற்றத்துடன் போட்டி நடைபெற்றது. மேலும் மைதானத்தில் வீரர்கள் மீது செருப்பு வீச்சு நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. டெல்லியில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அதிகாரிகள் ஆலோசனைக்கு பின் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...